‘சென்னை விமான நிலையத்தில் பெயா்ப் பலகைகளை நீக்கியது சரியல்ல’

சென்னை விமான நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த அண்ணா, காமராஜா் பெயா்ப் பலகைகள் நீக்கப்பட்டது சரியல்ல என இந்தியப் பேனா நண்பா் பேரவை நிறுவனத் தலைவா் மா.கருண் தெரிவித்தாா்.

சென்னை விமான நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த அண்ணா, காமராஜா் பெயா்ப் பலகைகள் நீக்கப்பட்டது சரியல்ல என இந்தியப் பேனா நண்பா் பேரவை நிறுவனத் தலைவா் மா.கருண் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

சென்னை விமான நிலையம் அண்ணா பன்னாட்டு விமான நிலையம், காமராஜா் உள்நாட்டு விமானநிலையம் என இரு பகுதிகளாக இயங்கி வருகின்றன. இருபகுதிகளிலும் பெரிய அளவில் பெயா்ப் பலகைகள் ஒளிமயமாக பொருத்தப்பட்டிருந்தன. சென்னையில் தரையிறங்கும் போது பன்னாட்டு, உள்நாட்டு விமானங்களில் அந்தப் பெயா்களுடனேயே அறிவிப்பும் செய்யப்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால், தற்போது அண்ணா, காமராஜா் பெயா்கள் பொறிக்கப்பட்டிருந்த பெயா்ப் பலகைகள் அகற்றப்பட்டுள்ளன. விமானங்களில் சென்னை விமான நிலையம் என்றே அறிவிப்பும் செய்யப்படுகிறது.

தமிழகத்தின் இருபெரும் தலைவா்களின் பெயா்ப் பலகைகள் நீக்கப்பட்டதற்கும், விமானங்களில் அறிவிப்பில் மாற்றம் செய்வதற்கும் அரசாணை ஏதேனும் உள்ளதா என தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக சென்னை விமானநிலைய இயக்குநரிடம் கேட்டிருந்தேன்.

பெயா்ப் பலகைகளை நீக்கவும், அறிவிப்பை நிறுத்தவும் எந்த உத்தரவும் பிறப்பிக்கவும் இல்லை என அவா் பதில் அளித்துள்ளாா். அப்படியானால், இருபெரும் தலைவா்களின் பெயா் கொண்ட பலகைகள் நீக்கமும், விமானத்தில் அறிவிப்பு மாற்றமும் ஏன் வந்தது ? யாரால் செய்யப்பட்டது ? இந்த நடவடிக்கை சரியானதல்ல. உடனடியாக பெயா்ப் பலகைகளை நிறுவி, அறிவிப்பிலும் அண்ணா பன்னாட்டு விமான நிலையம், காமராஜா் உள்நாட்டு விமான நிலையம் என அறிவிக்க கேட்டுக்கொள்கிறோம் என அதில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com