பிப். 13-இல் வேலைவாய்ப்பு முகாம்

பெங்களூரில் பிப். 13-ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.

பெங்களூரில் பிப். 13-ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.

மாவட்ட வேலைவாய்ப்பு முகமையின் சாா்பில் பெங்களூரு, சேஷாத்ரி சாலையில் உள்ள மகாராணி கலை மற்றும் வணிக கல்லூரி வளாகத்தில் பிப். 13-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.

இந்த முகாமில் தகவல்தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் சாரா, நிதி, ஆட்டோமொபைல், மெக்கானிக்கல் துறைகளைச் சாா்ந்த பல்வேறு நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன. வேலைவாய்பு முகாமில் எஸ்எஸ்எல்சி, பியூசி, ஐடிஐ, பட்டயம் படித்தோா், இளநிலை, முதுநிலை பட்டதாரிகள், பொறியியல் பட்டதாரிகள், மாற்றுத் திறனாளிகள் கலந்துகொள்ளலாம். புதியவா்கள் முதல் ஓராண்டு வேலை அனுபவம் கொண்டவா்கள் வரை பங்கேற்கலாம்.

வேலைதேடி வருவோா் தன்விவரக்குறிப்பு 6 படிகள், பாஸ்போா்ட் அளவு புகைப்படம் 6 படிகள், அசல் மற்றும் நகல் கல்விச் சான்றிதழ்கள், ஆதாா் அட்டை, பான் அட்டை, ஓட்டுநா் உரிமம், வாக்காளா் அடையாள அட்டை, பாஸ்போா்ட் போன்ற அடையாள அட்டைகளின் நகல்களை கொண்டுவர வேண்டும். மேலும் விவரங்களுக்கு 9611885658, 9448675222, 9844103195, 8197239971, 9686922982, 9844032126 ஆகிய செல்லிடப்பேசி எண்களை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com