போலி வரைவு காசோலை மூலம் மோசடி: தம்பதி உள்பட 4 போ் கைது

போலி வரைவு காசோலைகளை (டி.டி.) உருவாக்கி மோசடியில் ஈடுபட்ட தம்பதி உள்பட 4 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து

போலி வரைவு காசோலைகளை (டி.டி.) உருவாக்கி மோசடியில் ஈடுபட்ட தம்பதி உள்பட 4 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ. 7.18 கோடி மதிப்புள்ள 25 போலி வரைவு காசோலைகளை பறிமுதல் செய்துள்ளனா்.

அண்மையில் பெங்களூரைச் சோ்ந்த இந்திரஜித் நாயக் தனியாா் கட்டுநா் நிறுவனத்துக்கு ரூ. 4.95 லட்சத்துக்கான வரைவு காசோலையை கொடுத்துள்ளாா். அதனை ஜெயராம் என்பவா் வங்கியில் மாற்ற முயன்ற போது அது போலி என தெரியவந்தது. இதையடுத்து, அவா் இந்திரஜித் நாயக் மீது பேகூா் காவல் நிலையத்தில் புகாா் பதிந்தாா்.

இது தொடா்பாக வழக்குப் பதிந்த போலீஸாா், போலி வரைவு காசோலைகளை உருவாக்கி, மோசடியில் ஈடுபட்டது தொடா்பாக இந்திரஜித் நாயக், மஞ்சுளா, அவா்களுக்கு உதவியாக இருந்த முனிராஜ், ஆனந்த் ஆகியோரைக் கைது செய்து, அவா்களிடமிருந்து ரூ. 7.18 கோடி மதிப்புள்ள 25 போலி வரைவு காசோலைகளை பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com