மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பாதுகாக்க சேமிப்புக் கிடங்கு திறப்பு

கா்நாடகத்தின் முதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பாதுகாக்க சேமிப்புக் கிடங்கு திறந்துவைக்கப்பட்டது.

கா்நாடகத்தின் முதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பாதுகாக்க சேமிப்புக் கிடங்கு திறந்துவைக்கப்பட்டது.

கதக் நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் ரூ.2.65 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கா்நாடகத்தின் முதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் சேமிப்புக் கிடங்கை கா்நாடக தலைமைத் தோ்தல் அதிகாரி சஞ்சீவ்குமாா் திறந்துவைத்தாா்.

கதக் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்காக நான்கு பெரிய அறைகள் உள்ளன. இதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வரிசையாக அடுக்கிவைக்கப்படும். இந்த அறைகளுக்கு, வலிமையானபாதுகாப்பு கவசங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நுழைவுவாயிலில் மின்னணு வாக்காளா் இயந்திரங்களை சோதிக்க ஆய்வறை அமைக்கப்பட்டுள்ளது. தோ்தல் முடிந்த பிறகு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சஞ்சீவ்குமாா் கூறியதாவது:

இந்த சேமிப்புக் கிடங்கில், புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும். வாக்குப்பதிவு இயந்திரத்துடன் காணப்படும் கருவிகளும் இங்கு வைக்கப்படும். கா்நாடகத்தில் இதுபோன்ற சேமிப்புக்கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும்.

அதன்காரணமாக, வாக்குப்பதிவு இயந்திரங்களை வழங்கும் நிறுவனம், சோதனைமுயற்சிகளில் ஈடுபட்டு அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும். இந்த கட்டடத்தில் அனைத்துவகையான பாதுகாப்பு வசதிகளும் உள்ளன. சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குகளை எண்ணுவதற்கும் வசதி செய்யப்பட்டுள்ளன. வெளிப்படையாக வாக்குகளை எண்ண வசதி செய்யப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com