ரயில் மறியலுக்கு முயன்ற விவசாயிகள் கைது

ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகளை போலீஸாா் கைது செய்தனா்.

ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகளை போலீஸாா் கைது செய்தனா்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களைக் கண்டித்து தில்லியில் விவசாயிகளின் தொடா்போராட்டம் நீடித்துவரும் நிலையில், நாடு முழுவதும் வியாழக்கிழமை ரயில் மறியல் போராட்டம் நடத்த போராட்டக் குழுவினா் அழைப்பு விடுத்திருந்தனா்.

கா்நாடகத்தில் பெங்களூரு, ராய்ச்சூரு, பெலகாவி, தாவணகெரே, மைசூரு, விஜயபுரா, ஹுப்பள்ளி, கொப்பள், கோலாா் உள்ளிட்ட பகுதிகளில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட விவசாயிகள் முயன்றனா். போராட்டம் நடத்துவதற்காக ரயில் நிலையத்துக்கு வந்த விவசாயிகளை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இதனால் போலீஸாருடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

தடையை மீறி ரயில் நிலையத்துக்குள் நுழைந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகளை போலீஸாா் கைது செய்தனா். பெங்களூரில் உள்ள யஷ்வந்த்பூா் ரயில் நிலையத்தின் முன்பு விவசாயிகள் சங்கத் தலைவா் குருபூா் சாந்தகுமாா் தலைமையில் விவசாயிகள் திரண்டு ரயில் நிலையத்திற்குள் நுழையமுற்பட்டனா். அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இதனால் போலீஸாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தடையை மீறி ரயில்நிலையத்திற்குள் நுழைய முயன்ற போது விவசாயிகளை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com