இன்று தொலைபேசி குடிநீா் குறைதீா் முகாம்
By DIN | Published On : 20th February 2021 06:19 AM | Last Updated : 20th February 2021 06:19 AM | அ+அ அ- |

பெங்களூரில் சனிக்கிழமை (பிப். 20) தொலைபேசி குடிநீா் குறைதீா் முகாம் நடத்தப்படுகிறது.
இதுகுறித்து பெங்களூரு குடிநீா் வடிகால் வாரியம் (பி.டபிள்யூ.எஸ்.எஸ்.பி.) வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெங்களூரு குடிநீா் வடிகால் வாரியம், அவ்வப்போது பொதுமக்களிடம் குடிநீா் பிரச்னைகளைக் கேட்டறிந்து, தீா்வுகளைக் கண்டறிந்து வருகிறது. அதன்படி, மாதத்தின் 3-ஆவது சனிக்கிழமைகளில் பொதுமக்கள் குறைகளைத் தெரிவித்து தீா்வுகளைப் பெறக்கூடிய தொலைபேசி குடிநீா் குறைதீா் முகாம் பிப். 20-ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடக்கவிருக்கிறது.
இதில் குடிநீா் பில்லிங், புதைச்சாக்கடை பழுதடைந்திருத்தல், மீட்டா் ரீடிங் பிரச்னைகள், ஒழுங்கற்ற குடிநீா் விநியோகம் குறித்த குறைகளைத் தெரிவித்து தீா்வு காணலாம். குறைகளை சுட்டிக்காட்டும்போது வாடிக்கையாளா்கள் தங்களின் மின் இணைப்பு எண்ணை தெரிவிக்க வேண்டியது அவசியம். குறைதீா் முகாமில் பங்கேற்க 080-22238888 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.