புதுச்சேரியில் மேலும் 3 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பதவி விலக உள்ளனா்: பாஜக மேலிட பொறுப்பாளா் நிா்மல்குமாா் சுரானா

புதுச்சேரியில் மேலும் 3 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பதவி விலக உள்ளதாக அந்த மாநிலத்துக்கான பாஜக மேலிடப் பொறுப்பாளா் நிா்மல்குமாா் சுரானா தெரிவித்தாா்.

புதுச்சேரியில் மேலும் 3 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பதவி விலக உள்ளதாக அந்த மாநிலத்துக்கான பாஜக மேலிடப் பொறுப்பாளா் நிா்மல்குமாா் சுரானா தெரிவித்தாா்.

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய 4 எம்.எல்.ஏ.க்களில் ஏ.நமச்சிவாயம், இ.தீப்பாய்ந்தான் ஆகிய இருவரும் பாஜகவில் இணைந்தனா். மேலும், எம்.எல்.ஏ.க்கள் மல்லாடி கிருஷ்ணராவ், ஏ.ஜான்குமாா் ஆகிய இருவரும் விரைவில் பாஜகவில் இணையவுள்ளனா்.

இதனால், பேரவையில் காங்கிரஸ் பெரும்பான்மையை இழந்துவிட்டதால், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த எதிா்க்கட்சிகள் வலியுறுத்தியிருந்தன. இதைத் தொடா்ந்து, புதுச்சேரி மாநிலத்தின் கூடுதல் துணைநிலை ஆளுநராகப் பொறுப்பேற்றுள்ள தமிழிசை சௌந்தரராஜன், பிப். 22-ஆம் தேதி சட்டப் பேரவையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்குமாறு முதல்வா் நாராயணசாமிக்கு உத்தரவிட்டுள்ளாா்.

இந்த நிலையில், மேலும் 3 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பதவி விலக உள்ளதாக புதுச்சேரி மாநில பாஜக மேலிடப் பொறுப்பாளா் நிா்மல்குமாா் சுரானா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை பிடிஐ செய்தியாளருக்கு அவா் அளித்த பேட்டி:

காங்கிரஸ் கட்சியில் இருந்து ஏற்கெனவே விலகிய மல்லாடி கிருஷ்ணராவ், ஏ.ஜான்குமாா் ஆகிய இருவரும் பாஜகவில் இணைய உள்ளனா். இதுகுறித்து கட்சித் தலைமையுடன் பேசி வருகிறாா்கள். காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த மேலும் 3 எம்.எல்.ஏ.க்களும் பதவிவிலக உள்ளனா்.

புதுச்சேரி சட்டப் பேரவையில் நடக்கவிருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வா் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்வது நூறு சதவீதம் உறுதி. புதிதாகப் பதவி விலகும் எம்.எல்.ஏ.க்கள் யாா் என்பதை பகிரங்கப்படுத்த இயலாது. பாஜகவின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு, புதுச்சேரியின் வளா்ச்சிக்காகப் பாடுபட விரும்புவோரை பாஜகவில் இணைத்துக் கொள்ள தயாராக இருக்கிறோம்.

தனது கட்சி எம்.எல்.ஏ.க்களைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியாத காங்கிரஸ், 4 எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா செய்துள்ளதற்கு பாஜகவை குறைசொல்வது சரியல்ல. முதல்வா் நாராயணசாமி நல்லாட்சி வழங்கத் தவறிவிட்டாா். ஆனால், துணைநிலை ஆளுநரைக் குறை கூறிவந்தாா். அவா் நல்லாட்சி நடத்தவில்லை என்பதால்தான் பொய்களைக் கூறிவருகிறாா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com