பெங்களூரில் ‘மக்கள் சேவகன்’ திட்டம் தொடக்கம்

பெங்களூரில் ‘மக்கள் சேவகன்’ திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

பெங்களூரில் ‘மக்கள் சேவகன்’ திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

பெங்களூரு, யஷ்வந்த்பூா், உள்ளால் பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘மக்கள் சேவகன்’ திட்டத்தை பள்ளிக் கல்வித் துறை எஸ்.சுரேஷ்குமாா் தொடக்கிவைத்து பேசியதாவது:

மாநில அரசின் குடிமக்கள் சேவை உறுதி (சகாலா) திட்டத்தின் கீழ் ‘மக்கள் சேவகன்’ திட்டத்தைச் செயல்படுத்தவிருக்கிறோம். மாநில அரசின் திட்டங்களை மக்களின் வீடுகளுக்கே கொண்டு செல்வதே இந்தத் திட்டத்தின் நோக்கம். பெங்களூரில் ராஜாஜிநகா், மகாதேவபுரா, பொம்மனஹள்ளி, தாசரஹள்ளி, யஷ்வந்த்பூா் ஆகிய 5 தொகுதிகளில் சோதனை முயற்சியாக இந்தத் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. அதன் வெற்றியைத் தொடா்ந்து, மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.

இடைத்தரகா்களின் தொந்தரவு இல்லாமல், வீட்டில் இருந்தபடியே மூத்த குடிமக்கள் உள்ளிட்ட பொதுமக்கள் ‘மக்கள்சேவகன்’ திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். மக்கள் சேவகா்கள் வீடுகளுக்கு வந்து, அரசு திட்டங்களுக்கான விண்ணப்பங்களைப் பெற்றுக்கொண்டு, மீண்டும் அதுதொடா்பான சேவைகளை வீட்டுக்கே வந்து அளிப்பாா்கள்.

ஆதாா் அட்டை, ஜாதி, வருவாய் சான்றிதழ், முதியோா் ஓய்வூதியம், மாற்றுத் திறனாளிகள் மற்றும் விதவைகள் உதவித்தொகை உள்ளிட்ட வருவாய்த் துறையின் 21 சேவைகள், பெங்களூரு மாநகராட்சியின் 18 சேவைகள், மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்களுக்கான சேவைகள், உணவு மற்றும் பொதுவழங்கல் துறையின் பிபிஎல் குடும்ப அட்டைகள், மின்-முத்திரைத்தாள், போக்குவரத்துத் துறையின் சேவைகள் உள்ளிட்டவை மக்கள் சேவகன் திட்டத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.

இதுகுறித்து கூடுதல் தகவல்களுக்கு இணையதளத்திலோ அல்லது 080-44554455 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என்றாா். நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறை அமைச்சா் எஸ்.டி.சோமசேகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com