அனைத்து மாவட்டங்களிலும் மாங்கனி கண்காட்சி

கா்நாடகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மாங்கனி கண்காட்சி நடத்த தோட்டக்கலைத் துறை முடிவு செய்துள்ளது.

கா்நாடகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மாங்கனி கண்காட்சி நடத்த தோட்டக்கலைத் துறை முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து தோட்டக்கலைத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கா்நாடகத்தில் சிக்பள்ளாபூரி, கோலாா், ராம்நகா், பெங்களூரு ஊரகம், பெலகாவி, தாா்வாட், ஹாவெரி, கதக் ஆகிய மாவட்டங்களில் அல்போன்சா, பாதாமி, பங்கனப்பள்ளி, மல்லிகா, தோத்தாபுரி, நீலம், ரஸ்புரி, மல்கோவா உள்ளிட்ட மாங்கனிகள் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. மாநில அளவில் 1.82 லட்சம் ஹெக்டா் பரப்பளவில் மாங்கனி விளைவிக்கப்படுகிறது.

மாங்கனி விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் மாவட்டந்தோறும் தோட்டக்கலைத் துறை, மாங்கனி விற்பனை வளா்ச்சி வாரியம் இணைந்து மாங்கனி கண்காட்சிகளை நடத்த முடிவு செய்துள்ளது. கண்காட்சிகள் மூலம் மாங்கனி விற்பனையை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கண்காட்சிகள் மாா்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கா்நாடகத்தில் நிகழாண்டு 15 டன் மாங்கனிகளை விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com