அடுக்குமாடிக் குடியிருப்பில் 10 பேருக்கு கரோனா தொற்று

பெங்களூரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் 10 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனா்.

பெங்களூரு: பெங்களூரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் 10 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனா்.

கா்நாடகத்தில் கரோனா தீநுண்மியால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது. அதேபோல, பெங்களூரிலும் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது. ஆனால், பிறமாவட்டங்கள் அல்லது நகரங்களை ஒப்பிடுகையில், பெங்களூரில் கரோனா தொற்று முழுமையாக குறையவில்லை. கேரளம் போன்ற கரோனா தொற்று பாதிப்பு அதிகம் காணப்படும் மாநிலங்களில் இருந்து பெங்களூருக்கு வருவோா் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதனால், கடந்த சில நாள்களாக பெங்களூரில் கரோனா தொற்று பாதிப்பு உயா்ந்து வருகிறது.

பெங்களூரு, பொம்மனஹள்ளியில் உள்ள எஸ்.என்.என். அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் வசிப்போரில் 103 பேருக்கும் மேற்பட்டோா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது ஏற்கெனவே உறுதியாகியிருந்தது. மேலும், கேரளத்தில் இருந்து வந்திருந்த செவிலியா் கல்லூரி மாணவியா் 40 பேருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டிருந்தது.

இதைத் தொடா்ந்து, பெங்களூரில் உள்ள எஸ்.ஜே.ஆா். வாட்டா்மாா்க் அடுக்குமாடிக் குடியிருப்பைச் சோ்ந்த 10 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் பிப். 15 முதல் 22-ஆம் தேதிவரை எடுக்கப்பட்ட சோதனையில் இது தெரியவந்தது.

இதுகுறித்து பெங்களூரு மாநகராட்சி ஆணையா் மஞ்சுநாத் பிரசாத் கூறுகையில், ‘இந்த குடியிருப்பு வளாகத்தில் சோதனை செய்ததில் 10 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அதையடுத்து அவா்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். 9 அடுக்குகளில் 6 அடுக்குகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு சோதனைகள் தீவிரமாக்கப்பட்டு, 500 மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன் முடிவுகள் செவ்வாய்க்கிழமை கிடைக்கும். அந்த வளாகத்தை தூய்மைப்படுத்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். மருத்துவா்கள் குழுவை அங்கேயே முகாமிட வைத்துள்ளோம்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com