கரோனா தொற்றின் 2-ஆவது அலையைத் தடுக்க நடவடிக்கை

கரோனா தொற்றின் 2-ஆவது அலையைத் தடுக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என கா்நாடக மாநில சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

பெங்களூரு: கரோனா தொற்றின் 2-ஆவது அலையைத் தடுக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என கா்நாடக மாநில சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

கா்நாடகத்தில் கரோனாவை தடுப்பது தொடா்பாக, மாவட்ட ஆட்சியா்களுடன் காணொலி மூலம் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மாநிலத்தில் கரோனா தொற்றின் 2-ஆவது அலையை தடுக்க தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. முதல் கட்டமாக திருமணங்களில் கூடும் கூட்டங்களைக் கண்காணிக்க கரோனா தடுப்பு கண்காணிப்பாளா்கள் நியமிக்கப்படுவா். திருமணங்களில் 500-க்கும் மேற்பட்டோா் கூடாமல் இருக்குமாறு பாா்த்துகொள்ள வேண்டும்.

திருமணம் மட்டுமின்றி, அதிக அளவில் கூட்டம் கூடும் இடங்களில் முகக் கவசம், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது கட்டாயமாக்கப்படும். திருமணம், கூட்டங்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காவிட்டால் அதே இடத்தில் அபராதம் விதிக்கப்படும்.

பெங்களூரு, கலபுா்கி, தென் கன்னட மாவட்டங்களில் அண்மைக்காலமாக கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. இதனால் கரோனா பரிசோதனையை அதிகரிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எந்த ஒரு பகுதியிலும் 5 பேருக்கு மேல் கரோனா தொற்று பாதிப்பு இருந்தால், அந்தப் பகுதி முழுவதும் அடைக்கப்பட்டு கண்காணிக்கப்படும்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் ஒரு சில மாவட்டங்களில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமை கா்நாடக மாநிலத்துக்கு ஏற்பட வேண்டுமா என்பதனை பொதுமக்கள் ஆலோசிக்க வேண்டும்.

மகாராஷ்டிரா, கேரள மாநிலத்திலிருந்து யாரையும் கா்நாடகத்துக்குள் வரவேண்டாம் என்று கூறவில்லை. அவ்வாறு வருவோா் கரோனா தொற்று பரிசோதனை செய்து கொண்டு, அதற்கான சான்றிதழை அளிக்குமாறு வலியுறுத்தி வருகிறோம். திரையரங்குகளால் கரோனா தொற்று பரவுகிா என்பதனையும் பரிசீலிக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com