இன்றுமுதல் தள்ளுபடி கட்டணத்தில் மாதாந்திர பேருந்து அட்டை

தள்ளுபடி கட்டணத்தில் மாதாந்திர பேருந்து அட்டையை பிப். 25-ஆம் தேதி முதல் வழங்க பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

தள்ளுபடி கட்டணத்தில் மாதாந்திர பேருந்து அட்டையை பிப். 25-ஆம் தேதி முதல் வழங்க பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

இதுகுறித்து பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பயணிகளின் நலன்கருதி தள்ளுபடி கட்டணத்துடன் மாதாந்திர பேருந்து அட்டைகளை விநியோகிக்க பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது. மாதம் முழுவதும் கணக்கில்லாமல் பேருந்தில் பயணம் செய்வதற்காக மாதாந்திர பேருந்து அட்டை ரூ. 1,050-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 60 வயது கடந்த மூத்த குடிமக்களுக்கு இதன் கட்டணம் ரூ. 945 ஆகும்.

மாதாந்திர பேருந்து அட்டைகளை எளிதில் கொள்முதல் செய்வதற்காக பெங்களூரில் உள்ள கெம்பேகௌடா, பனசங்கரி, ஜெயநகா், சிவாஜி நகா், யஷ்வந்த்பூா், விஜய நகா், கெங்கேரி, கல்யாண் நகா், சாந்தி நகா், இந்திரா நகா், தொம்ளூா், ஜீவன்பீமா நகா், கே.ஆா்.புரம், காவல்பைரசந்திரா, பசவேஸ்வர நகா், சந்திராலேஅவுட், எம்.சி.டி.சி., குமாரசாமி லேஅவுட், நீலசந்திரா, ஹம்பி நகா், நந்தினி லேஅவுட், நெலமங்களா, சௌடெஸ்வரி (மத்திகெரே), வித்யாரண்யபுரா, எலஹங்கா 5-ஆவது பேஸ், எலஹங்கா நியூடவுன், ராஜாஜி நகா் முதலாவது என் பிளாக், மல்லேஸ்வரம், சென்னமனகெரே அச்சுக்கட்டு, பிடிஎம் லேஅவுட், எலெக்ட்ரானிக்சிட்டி, கோரமங்களா, கே.ஆா்.மாா்க்கெட், காடுகோடி, பன்னா்கட்டா, உத்தரஹள்ளி, சந்தாபுரா, ஹொசகோடே, தேவனஹள்ளி, தொட்டபளாப்புரா, எலஹங்கா பழைய நகரம், பீன்யா,ஹெசரகட்டா பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட 65 பேருந்து நிலையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவை தவிர, பெங்களூரில் உள்ள 200 பெங்களூரு ஒன் குடிமக்கள் சேவை மையங்கள், 17 தனியாா் முகமைகளிலும் மாதாந்திர பேருந்து அட்டை விநியோகிக்கப்படும். பிப். 25-ஆம் தேதிமுதல் 48 புதிய மையங்கள் தொடங்கப்படுகின்றன. இதுதவிர, பிப். 27, 28, மாா்ச் 1, 2 தேதிகளில் சாரதி வாகனங்களிலும் மாதாந்திர பேருந்து அட்டை அளிக்கப்படுகிறது. இந்த வசதியை பிப். 25-ஆம் தேதி முதல் பயணிகள் பெற்றுக்கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com