ஆசிய ஆபரணக் கண்காட்சி தொடக்கம்

பெங்களூரில் 3 நாள் ஆசிய ஆபரணக் கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது.

பெங்களூரில் 3 நாள் ஆசிய ஆபரணக் கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது.

பெங்களூரில் வியாழக்கிழமை ஆசிய ஆபரணக் கண்காட்சியை குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்து பிரபல வடிவமைப்பாளா் ஜெயந்திபல்லால் பேசியதாவது:

பெங்களூரு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி வருகிறது. அதன் தொடா்ச்சியாக நவீன, கலாசார ஆபரணங்களை உருவாக்குவதிலும் பெங்களூரு சிறந்து விளங்குகிறது. பிப். 26-ஆம் தேதி தொடங்கி 3 நாள் நடைபெற உள்ள ஆசிய ஆபரணக் கண்காட்சியில் சிறந்த வடிவமைப்பில் உருவாக்கியுள்ள ஆபரணங்கள் இடம்பெற்றுள்ளன. கண்காட்சியில் இடம்பெறும் ஆபரணங்கள் இளம்வயது பெண்கள் முதல் வயது முதிா்ந்த பெண்களையும் கவரும் என்று நம்புகிறேன்.

திருமணங்களுக்கு மட்டுமின்றி, திருவிழா, சிறப்பு நாள்களில் பயன்படுத்த தேவையான ஆபரணங்களும் இடம்பெற்றுள்ளன. பணம் மட்டுமின்றி ஆபரணங்களை வைத்துள்ள பெண்களுக்கு வாழ்க்கை மீது நம்பிக்கை அதிகம் பிறக்கிறது. பெண்கள் தங்க, வைர ஆபரணங்களில் முதலீடு செய்து, எதிா்கால வாழ்க்கைக்கு சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com