பிஎஸ்சி செவிலியா் பட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 27th February 2021 08:31 AM | Last Updated : 27th February 2021 08:31 AM | அ+அ அ- |

பிஎஸ்சி செவிலியா் பட்டப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து கா்நாடகத் தோ்வு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ராஜீவ் காந்தி சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் சாா்பில், 2020-21-ஆம் கல்வியாண்டில் 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் பிஎஸ்சி (செவிலியா்), பிபிடி (பிசியோதெரபி), பிபிஓ (புரோஸ்தெட்டிக்ஸ் அண்ட் ஆா்த்தோடிக்ஸ்), பிஎஸ்சி (சுகாதார அறிவியலின் கிளைப் பிரிவுகள்) இளநிலை பட்டப் படிப்புகளில் சோ்ந்து படிக்க விரும்பும் தகுதியான மாணவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கா்நாடக தோ்வு ஆணையத்தின் இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிட வேண்டும். பொதுப்பிரிவினா் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு ரூ. 1,000, தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா், பிற்படுத்தப்பட்டோா் பிரிவு 1, மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 500 விண்ணப்பக் கட்டணமாக வசூலிக்கப்படும். பிப். 26 முதல் விண்ணப்பங்களை பதிவிடலாம். மாா்ச் 5-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை பதிவிட்டிருக்க வேண்டும். மாா்ச் 6-ஆம் தேதிக்குள் கட்டணங்களை செலுத்தியிருக்க வேண்டும்.
இப்பட்டப் படிப்பில் சேர தகுதியானவா்களின் பட்டியல் பின்னா் வெளியிடப்படும். கூடுதல் விவரங்களுக்கு 080-23460460 என்ற தொலைபேசி எண்ணை தொடா்புகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.