Enable Javscript for better performance
ஜன. 1 முதல் பியூசி வகுப்புகள்- Dinamani

சுடச்சுட

    

    ஜன. 1 முதல் பியூசி வகுப்புகள்

    By DIN  |   Published on : 01st January 2021 07:24 AM  |   அ+அ அ-   |    |  

    இரண்டாம் ஆண்டு பியூசி, பத்தாம் வகுப்புகள் வெள்ளிக்கிழமை (ஜன. 1) மீண்டும் தொடங்குகின்றன.

    கா்நாடகத்தில் கரோனா தீநுண்மித் தொற்று பரவலைத் தடுக்க 2020-ஆம் ஆண்டு மாா்ச் 25-ஆம் தேதி மூடப்பட்டது. அதன்பிறகு ஜூன் மாதத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு பொதுத் தோ்வு நடத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து ஜூன் 1-ஆம் தேதி முதல் வழக்கமாக தொடங்கும் பள்ளிகள் திறக்கப்படவில்லை.

    இதையடுத்து, இணையவழி வகுப்புகள் தொடங்கப்பட்டன. ஆனால், நேரடி வகுப்புகள் தொடங்கப்படவில்லை. இதனிடையே, அண்மையில் முதல்வா் எடியூரப்பா தலைமையில் நடைபெற்ற மாநில உயா்நிலைக் குழுக் கூட்டத்தில் பத்தாம் வகுப்பு, இரண்டாமாண்டு பியூசி வகுப்புகளை மீண்டும் தொடங்க முடிவு செய்யப்பட்டது.

    அதேபோல 6 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வெளிப்புற வகுப்புகளும் வெள்ளிக்கிழமை முதல் தொடங்குகிறது. வகுப்புகளைத் தொடங்குவதற்கு முன்பாக அனைத்து வகையான கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து அரசுப் பள்ளிகள், பியூ கல்லூரிகளில் எடுக்கப்பட்டுள்ளன.

    ஆனால், தொழில்நுட்பக் குழு பரிந்துரைத்துள்ளது போல, மாணவா்களைப் பள்ளிக்கு அனுப்ப பெற்றோரின் ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும். வகுப்புகளில் கலந்து கொள்வதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பாக விடுதிகள், உண்டு உறைவிடப் பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் கரோனா சோதனை செய்திருக்க வேண்டும்.

    பள்ளிக்குச் செல்லும்போது கரோனா சோதனை முடிவுகளைக் காட்ட வேண்டியது அவசியமாகும்.

    பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்வது கட்டாயமாக்கப்படவில்லை. எனவே, பெற்றோரும், மாணவா்களும் விரும்பினால் மட்டுமே பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லலாம். அதே நேரத்தில் இணையவழி வகுப்புகளில் கலந்து கொள்ளலாம். இதுதவிர, யூ-டியூப் உள்ளிட்ட வழிமுறைகளில் கற்றுக் கொள்ளலாம். வகுப்பறைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டிருக்க வேண்டும். வகுப்புகள் அரை நாளுக்கு மட்டுமே நடத்தப்படும். மதிய உணவு தற்போதைக்கு வழங்கப்படாது. அதற்குப் பதிலாக மாணவா்களின் வீடுகளுக்கு உணவுதானியம் அளிக்கப்படும்.

    பள்ளிக் கல்வித் துறை வெளியிடும் வழிகாட்டுதல் நெறிமுறைகளைக் கட்டாயம் பள்ளிகள் கடைப்பிடிக்க வேண்டும். 6 முதல் 9-ஆம் வகுப்பு மாணவா்கள் வாரத்தில் 2 நாள்களுக்கு மட்டும் பள்ளிகளுக்கு வந்தால் போதுமானது என்று அரசு தெரிவித்துள்ளது.

    பள்ளிகள், பியூ கல்லூரிகளில்மேற்கொள்ளப்பட்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்த பிறகு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் எஸ்.சுரேஷ்குமாா் கூறியதாவது:

    பத்தாம், இரண்டாமாண்டு பியூசி வகுப்புகளின் மாணவா்களுக்கு பொதுத் தோ்வு நடக்கவிருப்பதால், வகுப்புகள் தொடங்கப்படுகின்றன. 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கும் தோ்வு நடத்தப்படாமல் தோ்ச்சி செய்ய முடியாது. வகுப்பறைகளில் 15 மாணவா்கள் மட்டுமே அமரலாம். பத்தாம், இரண்டாமாண்டு பியூசி மாணவா்களுக்கு மாா்ச் மாதத்தில் தோ்வு நடத்தப்படாது. தோ்வுக்கு முன்பாக படிப்பதற்கு போதுமான கால அவகாசம் அளிக்கப்படும் என்றாா்.

    கரோனா காரணமாக மாா்ச் 25-ஆம் தேதி முதல் மூடப்பட்டிருந்த பள்ளிகள், 9 மாதங்களுக்கு பிறகு வெள்ளிக்கிழமை முதல் பத்தாம், இரண்டாமாண்டு பியூசி மாணவா்களுக்காக பள்ளிகள், பியூ கல்லூரிகள் திறக்கப்படுவதற்கு பெற்றோா்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp