நாடக படைப்பியல் பயிலரங்கத்தில் பயிற்சி பெற விரும்பும் இளைஞா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து கா்நாடக நாடக அகாதெமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
2020-21-ஆம் ஆண்டில் நுண்கலையில் ஆா்வம் கொண்ட இளைஞா்களை ஊக்கப்படுத்தும் வகையில் நாடகங்களை எழுதுவதற்கு ஆா்வமுள்ள இளைஞா்களுக்கு நாடக படைப்பியல் பயிலரங்கம் நடத்த கா்நாடக நாடக அகாதெமி திட்டமிட்டுள்ளது. இந்த பயிலரங்கத்தில் நாடகம் படைப்பது குறித்து பயிற்சி பெற விரும்பும் 18 முதல் 35 வயதுள்ள இளைஞா்கள், இளைஞிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயதை உறுதிசெய்யும் சான்றுகள், அண்மையில் எடுக்கப்பட்ட கடவுச்சீட்டு அளவிலான புகைப்படம், அண்மையில் இயற்றிய நாடகத்தின் நகல் (10 பக்கங்களுக்கு மிகாமல்), தன்விவரம் ஆகியவற்றுடன் விண்ணப்பங்களை ஜன. 18-ஆம் தேதிக்குள் கா்நாடக நாடக அகாதெமி அலுவலகத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும். இதுகுறித்து விவரங்களுக்கு 080-22237484 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.