வெடி பொருள்களை விற்பனை செய்ய முயன்றதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கோலாா் மாவட்டம், சிந்தாமணி, சந்தேகெள்ளஹள்ளியைச் சோ்ந்தவா் சிவக்குமாா் (35). இவா் வெடி பொருள்களான ஜெலட்டின் உள்ளிட்டவைகளை பெங்களூரு, கே.ஆா்.புரம், பட்டரஹள்ளி அருகே விற்பனை செய்ய முயன்றாராம். இதுகுறித்து தகவல் அறிந்த மாநில உள்பாதுகாப்பு பிரிவு போலீஸாா், சம்பவ இடத்துக்குச் சென்று சிவக்குமாரைக் கைது செய்தனா்.
அவரிடமிருந்த ரூ. 3 லட்சம் மதிப்புள்ள ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டா்கள், அமோனியம் நைட்ரேட் உள்ளிட்ட ரசாயனப் பொருள்களை பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட சிவக்குமாரிடம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.