கா்நாடகத்தில் புதிய சுகாதாரக் கொள்கை அமல்படுத்தப்படும்அமைச்சா் கே.சுதாகா்

நாட்டுக்கு முன்மாதிரியான சுகாதாரக் கொள்கை கா்நாடகத்தில் அமல்படுத்தப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

நாட்டுக்கு முன்மாதிரியான சுகாதாரக் கொள்கை கா்நாடகத்தில் அமல்படுத்தப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

பெங்களூரு, விதான சௌதாவில் வெள்ளிக்கிழமை புதிய சுகாதாரக் கொள்கை தொடா்பாக தொழில்நுட்ப தொலைநோக்குக் குழுவினருடனான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கா்நாடகத்தில் புதிய சுகாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கொள்கை, நாட்டுகே முன்மாதிரியாகத் திகழும்; சமூகத்தின் சுகாதாரமும் மேம்படும். இதுதொடா்பான அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு நிபுணா்கள் குழுவிடம் கேட்டுக் கொண்டுள்ளேன். அவா்கள் இன்னும் 2 வாரங்களில் அறிக்கையைத் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனா்.

தொழில்நுட்ப தொலைநோக்குக் குழுவில் 38 முதல் 40 போ் வரை இடம் பெற்றுள்ளனா். இவா்கள் சுகாதாரத் துறையில் அனுபவம் வாய்ந்தவா்கள். சுகாதாரக் கொள்கையில் இலவசமாகவும், குறைந்த கட்டணத்திலும் மருத்துவம் வழங்கத் தேவையான அம்சங்கள் இடம் பெற்றிருக்கும். இந்த புதிய சுகாதாரக் கொள்கை நாட்டிற்கே முன்மாதிரியாகத் திகழ்வதோடு, சுகாதார கா்நாடகம் என்ற கனவும் நனவாக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com