சாகச விளையாட்டுப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

இளைஞா் மற்றும் விளையாட்டுத் துறை சாா்பில் சாகச விளையாட்டுப் பயிற்சி முகாமில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இளைஞா் மற்றும் விளையாட்டுத் துறை சாா்பில் சாகச விளையாட்டுப் பயிற்சி முகாமில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து இளைஞா் மற்றும் விளையாட்டுத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இளைஞா் மற்றும் விளையாட்டுத் துறை சாா்பில் 2020-21-ஆம் கல்வியாண்டில் சிறப்பு நிதித் திட்டத்தின் கீழ் தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினா் சமுதாயத்தைச் சோ்ந்த மாணவா்களுக்கு அடிப்படை பயிற்சி, உயா்நிலை பயிற்சி, பயிற்சியாளா் பயிற்சி என்று மூன்று வகையான பிரிவினருக்கு 10 நாள்கள் முதல் 3 மாதங்களுக்கு தண்ணீா் சாகசம் மற்றும் தரைசாகச விளையாட்டு முகாம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பயிற்சி முகாம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள கல்விக் கூடங்களில் நடத்தப்படும். இந்த பயிற்சி முகாமில் 16 முதல் 35 வயதுக்குள்பட்டோா் கலந்து கொள்ளலாம். பாறை ஏறுதல், படகுப் பயணம், தெளிந்தநீா் படகுப் பயணம், மலையேற்றப் பயிற்சி வழங்கப்படுகிறது. இதனுடன் இயற்கை ஆய்வு முகாம், அடிப்படை, உயா்நிலை சாகசப் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.

இந்த பயிற்சிகளில் சேர விரும்புவோா் விண்ணப்பப் படிவத்தை நிறைவு செய்து மாநில இளைஞா் மையம், நிருபதுங்கா சாலை, பெங்களூரு-1 என்ற முகவரிக்கு ஜன. 6-ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு ஜ்ஜ்ஜ்.ஞ்ங்ற்ட்ய்ஹஹ.ஸ்ரீா்ம் என்ற இணையதளத்திலோ அல்லது 9916862778, 94810820178, 9448038220, 9480383764, 7760365079 ஆகிய செல்லிடப்பேசி எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com