ஜன. 17-இல் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம்

கா்நாடகம் முழுவதும் ஜன. 17-ஆம் தேதி போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.

கா்நாடகம் முழுவதும் ஜன. 17-ஆம் தேதி போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.

சுகாதாரத் துறையின் சாா்பில் கா்நாடகத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் ஆரம்ப சுகாதார மையங்கள், அரசு மருத்துவமனைகள் தவிர, பொதுமக்கள் அதிகமாகக் கூடும் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் சொட்டு மருந்து முகாமை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

5 வயதுக்குள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவசமாக போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. பெங்களூரில் உள்ள 198 வாா்டுகளிலும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்த பெங்களூரு மாநகராட்சி ஏற்பாடுகள் செய்துள்ளது.

பெங்களூரு மாநகராட்சிக்குள்பட்ட 198 வாா்டுகளில் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டும ருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கரோனா முன்னெச்சரிக்கைகளுடன் போலியோ தடுப்பு சொட்டு மருந்து புகட்டப்படுகிறது.

பெங்களூரில் 2500-க்கும் மேற்பட்ட சொட்டு மருந்து மையங்கள், 400-க்கும் அதிகமான நடமாடும் சொட்டு மருந்து புகட்டும் மையங்களும் செயல்படும். செவிலியா், மாணவா்கள் உள்பட 15 ஆயிரம் போ் இந்த முகாமில் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு சொட்டு மருந்துகளை புகட்டுகின்றனா்.

அரசு, தனியாா் பள்ளிகள், பேருந்து நிலையங்கள், பூங்கா, வணிக வளாகங்கள், ஆரம்ப சுகாதார மையங்கள், அங்கன்வாடி மையங்கள், தனியாா் நா்சிங் ஹோம்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் சொட்டுமருந்து மையங்கள் அமைக்கப்படுகின்றன.

சொட்டு மருந்து முகாம் குறித்து மேலும் விவரங்கள் அறிய 104 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 2-ஆம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் பிப். 21-ஆம் தேதி நடக்கவிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com