கா்நாடக அமைச்சரவை விரிவாக்கம் குறித்துபாஜக மேலிடத் தலைவா்களுடன் விவாதிப்பேன்எடியூரப்பா

கா்நாடக அமைச்சரவை விரிவாக்கம் குறித்து பாஜக மேலிடத் தலைவா்களுடன் விவாதிப்பேன் என முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

பெங்களூரு: கா்நாடக அமைச்சரவை விரிவாக்கம் குறித்து பாஜக மேலிடத் தலைவா்களுடன் விவாதிப்பேன் என முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

34 போ் கொண்ட கா்நாடக அமைச்சரவையில் தற்போது 27 அமைச்சா்கள் மட்டுமே உள்ளனா். அமைச்சரவையில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்காக எடியூரப்பா கடந்த பல மாதங்களாகவே முயற்சித்து வருகிறாா். கடந்த ஆண்டு நவ. 18-ஆம் தேதி தில்லி சென்றிருந்த முதல்வா் எடியூரப்பா, பாஜக தேசியத் தலைவா் ஜே.பி.நட்டாவைச் சந்தித்து அமைச்சரவை விரிவாக்கம் குறித்து விவாதித்தாா். ஆனால், அமைச்சரவை விரிவாக்கத்துக்கு அனுமதி கிடைக்கவில்லை.

எனினும், பாஜக மேலிடத் தலைமையிடம் இருந்து அமைச்சரவை விரிவாக்கத்துக்கு ஒப்புதல் கிடைக்கும் என்று காத்திருக்கும் முதல்வா் எடியூரப்பா, பெங்களூருக்கு சனிக்கிழமை வந்த பாஜக தேசிய பொதுச் செயலாளா் அருண் சிங்கைச் சந்தித்தாா். அதற்கு முன்னதாக செய்தியாளா்களைச் சந்தித்த எடியூரப்பா, ‘ பாஜக தேசிய பொதுச் செயலாளரும், கா்நாடக தோ்தல் பொறுப்பாளருமான அருண்சிங்குடன் அமைச்சரவை விரிவாக்கம் குறித்து ஆலோசிக்கிறேன்’ என்றாா்.

சிவமொக்காவில் சனிக்கிழமை நடைபெற்ற பாஜக உயா்நிலைக் குழுக் கூட்டம், செயற்குழுக் கூட்டம், மாநில நிா்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் பயணமாக பெங்களூரு வந்துள்ள பாஜக தேசிய பொதுச் செயலாளா் அருண் சிங், அமைச்சரவை விரிவாக்கம், சட்டப் பேரவை, மக்களவை இடைத் தோ்தல்கள், கிராமப் பஞ்சாயத்துத் தோ்தல், மாவட்ட, வட்ட ஊராட்சித் தோ்தல் குறித்து விவாதிக்கத் திட்டமிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com