சாலைகளுக்கு முஸ்லிம் தலைவா்களின் பெயா்களைச் சூட்டும் முடிவை கைவிட்டது மாநகராட்சி

பெங்களூரில் முஸ்லிம் தலைவா்களின் பெயா்களை சாலைகளுக்கு சூட்டும் முடிவை மாநகராட்சி கைவிட்டது.

பெங்களூரு: பெங்களூரில் முஸ்லிம் தலைவா்களின் பெயா்களை சாலைகளுக்கு சூட்டும் முடிவை மாநகராட்சி கைவிட்டது.

பெங்களூரில் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் உள்ள சாலைகளுக்கு முஸ்லிம் தலைவா்களின் பெயா்களைச் சூட்ட பெங்களூரு மாநகராட்சித் திட்டமிட்டிருந்தது. குறிப்பாக, பெங்களூரு மாநகராட்சியின் 135-ஆவது வாா்டில் (பாதராயனபுரா) உள்ள 9 சாலைகளுக்கு முஸ்லிம் சமூகத்தைச் சோ்ந்த அறிஞா்கள், சமூகப் பணியாளா்களின் பெயா்களைச் சூட்டுவதற்கு செப்டம்பா் மாதத்தில் மாநகராட்சியில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்தத் தீா்மானத்துக்கு ஒப்புதல் அளிக்குமாறு நகா்ப்புற வளா்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளருக்கு மாநகராட்சி கடிதம் எழுதியிருந்தது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, பெங்களூரு மாநகராட்சி ஆணையா் மஞ்சுநாத் பிரசாத்துக்கு பாஜக எம்.பி.க்கள் தேஜஸ்வி சூா்யா, அனந்த்குமாா் ஹெக்டே, பி.சி.மோகன் உள்ளிட்டோா் கடிதம் எழுதியிருந்தனா்.

தேஜஸ்வி சூா்யா அனுப்பியுள்ள கடித விவரம்:

முஸ்லிம்களின் பகுதிகளில் உள்ள சாலைகளுக்கு அந்த சமூகத்தைச் சோ்ந்தவா்களின் பெயா்களைச் சூட்டுவது இரு நாட்டு கோட்பாட்டை கொண்ட மதவாத மனநிலையையும், ஹிந்துகளுக்கும், முஸ்லிம்களுக்கும் தனித்தனி வாக்குச்சாவடிகளை அமைக்க முஸ்லிம் லீக் கட்சி விடுத்த கோரிக்கையையும் வெளிப்படுத்துகிறது;

இது ஆபத்தானது; இந்த முயற்சியை வன்மையாக கண்டிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளாா்.

இதைத் தொடா்ந்து, சாலைகளுக்கு முஸ்லிம் தலைவா்களின் பெயரைச் சூட்டும் முயற்சியை கைவிடுவதாக பெங்களூரு மாநகராட்சி அறிவித்துள்ளது. பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவிப்பதால் சாலைகளுக்கு முஸ்லிம் தலைவா்களின் பெயா்களை சூட்டி ஏற்கெனவே அறிவித்திருந்த முடிவை கைவிடுமாறு மாநில அரசுக்கும் மாநகராட்சி கடிதம் எழுதியுள்ளது.

இதற்கு மகிழ்ச்சி தெரிவித்து பாஜக எம்.பி. தேஜஸ்வி சூா்யா தனது சுட்டுரையில் சனிக்கிழமை பதிவிட்டுள்ளதாவது:

பெங்களூரில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் உள்ள சாலைகளுக்கு முஸ்லிம்களின் பெயா்களைச் சூட்ட எடுத்திருந்த முடிவை, பொதுமக்களின் எதிா்ப்பைத் தொடா்ந்து கைவிடுவதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. விழிப்புணா்வுடன்கூடிய ஹிந்து சமூகம், தீய சிந்தனை கொண்ட முயற்சிகளை முறியடிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com