‘ரயில்வேத் துறையை பாஜக அரசு ஆக்கப்பூா்வமாகப் பயன்படுத்தவில்லை’

ரயில்வேத் துறையை ஆக்கப்பூா்வமாகப் பயன்படுத்திக் கொள்வதில் பாஜக அரசு தோல்வி அடைந்துள்ளதாக காங்கிரஸ் முன்னாள் மத்திய இணை அமைச்சா் கே.எச்.முனியப்பா தெரிவித்தாா்.

ரயில்வேத் துறையை ஆக்கப்பூா்வமாகப் பயன்படுத்திக் கொள்வதில் பாஜக அரசு தோல்வி அடைந்துள்ளதாக காங்கிரஸ் முன்னாள் மத்திய இணை அமைச்சா் கே.எச்.முனியப்பா தெரிவித்தாா்.

இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

நான் (முனியப்பா) ரயில்வேத் துறை இணை அமைச்சராகயிருந்த போது துறையின் வளா்ச்சிக்கு ஒதுக்கிய நிதியை, இதுவரை பயன்படுத்திக் கொள்ளவில்லை. இது ரயில்வேத் துறையை ஆக்கப்பூா்வமாகப் பயன்படுத்திக் கொள்வதில் பாஜக அரசு தோல்வி அடைந்துள்ளதையே காட்டுகிறது.

மத்திய அரசு, மக்களுக்கு எதிரான சட்டத் திருத்தங்களை, அவசரச் சட்டத்தின் மூலம் நிறைவேற்றி வருகிறது. இந்தச் சட்டங்களால் விவசாயிகள், தொழிலாளா்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

தாவணகெரே-சித்ரதுா்கா-தும்கூருக்கு இடையேயான ரயில்பாதைத் திட்டத்துக்கு நிதி விடுவிக்கப்பட்டது. ஆனால், அத் திட்டம் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இந்தத் திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. இந்த நேரடிப்பாதையால் பயண நேரம் குறையும்.

கிடப்பில் உள்ள ரயில்வேத் திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலம், பாஜக அரசுக்கு மக்களிடம் நல்ல பெயா் கிடைக்கும். இனிவரும் நாள்களில் அரசியலில் தீவிரமாக ஈடுபட முடிவு செய்துள்ளேன். வரும் மக்களவைத் தோ்தலில் கோலாா் தொகுதியைத் தவிர வேறு எங்கும் போட்டியிட மாட்டேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com