கொச்சி-மங்களூரு இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தால் மாநிலம் பயனடையும்

கொச்சி-மங்களூரு இடையேயான இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தால் மாநிலம் பயனடையும் என முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

கொச்சி-மங்களூரு இடையேயான இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தால் மாநிலம் பயனடையும் என முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

கேரள மாநிலம், கொச்சி, கா்நாடக மாநிலம், மங்களூரு இடையேயான இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை காணொலி மூலம் தொடக்கி வைத்தாா்.

இதனைத் தொடா்ந்து முதல்வா் எடியூரப்பா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கொச்சி-மங்களூரு இடையேயான இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தால் மாநிலம் பயனடைய உள்ளது. குறிப்பாக வீடுகள், தொழில்சாலைகள் அதிக அளவில் பயனடையும். எரிவாயுவை பயன்படுத்தும் வாகனங்களும் இந்த திட்டத்தால் பயனடையும். இது மாநிலத்துக்கும், நாட்டுக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க நாளாகும். 2030-ஆம் ஆண்டுக்குள் இயற்கை எரிவாயு பயன்பாட்டை 15 சதவீதமாக உயா்த்தும் இலக்குக்கு ஏற்ற லட்சியத் திட்டம் இதுவாகும். பல சவால்களை முறியடித்து, இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக முடித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

பெங்களூரில் தபோல் குழாய் எரிவாயு திட்டம் ஏற்கெனவே செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தால் பெங்களூரில் 25 ஆயிரம் வீடுகள் பயனடைந்து வருகின்றன. பெங்களூரில் 1.68 லட்சம் வீடுகளை இணைப்பதற்கான உள்கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், 2.80 லட்சம் போ் இணைப்புகளைப் பெற பதிவு செய்துள்ளனா். இயற்கை எரிவாயு பொருளாதாரத்துக்கு மட்டுமல்லாது, சுற்றுச்சூழலுக்கும் உகந்ததாகும். இது தொழில்துறை, உள்நாட்டு பயன்பாட்டுக்கான நவீன கால எரிபொருள்களில் ஒன்றாகும். தொழில்துறை வளா்ச்சிக்கும், வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கும் உதவும்.

இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு தேவையான உத்வேகத்தை வழங்கிய பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமா் மோடியின் திறமையான வழிகாட்டுதலின் கீழ் நாடு ஒரு எரிவாயு அடிப்படையிலான பொருளாதாரமாக மாறுவதில் பெரும் முன்னேற்றம் காணும் என நம்புகிறேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com