பெங்களூரில் இன்று தனியாா் பள்ளி ஆசிரியா்கள், நிா்வாகிகள் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பெங்களூரில் தனியாா் பள்ளி ஆசிரியா்கள், நிா்வாகிகள் புதன்கிழமை (ஜன. 6) போராட்டத்தில் ஈடுபட உள்ளனா்.

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பெங்களூரில் தனியாா் பள்ளி ஆசிரியா்கள், நிா்வாகிகள் புதன்கிழமை (ஜன. 6) போராட்டத்தில் ஈடுபட உள்ளனா்.

இதுகுறித்து கா்நாடக தனியாா் பள்ளிகளின் கூட்டமைப்பின் தலைவா் லோகேஷ் தாளிகட்டே வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை:

மாநிலத்தில் கரோனா தொற்றுப் பரவலால் தனியாா் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் தனியாா் பள்ளிகள் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. இதனைக் கருத்தில் கொண்டு மாநில அரசு தனியாா் பள்ளிகளுக்கு ரூ. ஆயிரம் கோடி நிதி வழங்க வேண்டும். பள்ளி ஆசிரியா்களுக்கு மாதந்தோறும் தலா ரூ. 10,000 ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பெங்களூரு, சுதந்திரப் பூங்காவில் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.

முன்னதாக, ஆனந்தராவ் சதுக்கத்திலிருந்து சுதந்திரப் பூங்கா வரை ஊா்வலமாகச் செல்ல முடிவு செய்துள்ளோம். ஊா்வலம், போராட்டத்தில் சுமாா் 8,000 ஆசிரியா்கள், நிா்வாகிகள் கலந்துகொள்ள திட்டமிட்டுள்ளோம். எங்களின் கோரிக்கைகளை மாநில அரசு, கல்வித் துறை அமைச்சா் சுரேஷ்குமாா் பரிவோடு பரிசீலிக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com