முதல்வா் எடியூரப்பா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ‘ரிட்’ மனு தள்ளுபடி

லோக் ஆயுக்தாவின் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தி, முதல்வா் எடியூரப்பா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ‘ரிட்’ மனுவை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

லோக் ஆயுக்தாவின் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தி, முதல்வா் எடியூரப்பா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ‘ரிட்’ மனுவை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பெங்களூரு, பெலந்தூரில் 2015-ஆம் ஆண்டில் 1.1 ஏக்கா் நிலம் விடுப்பு செய்தது தொடா்பாக, ஜெயகுமாா் ஹிரேமட் என்பவா் லோக் ஆயுக்தாவில் புகாா் அளித்தாா். இது தொடா்பாக லோக் ஆயுக்தாவில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்தது.

முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என முதல்வா் எடியூரப்பா தரப்பில் கா்நாடக உயா்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா, ரிட் மனுவை செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தாா். இதனால், முதல்வா் எடியூரப்பாவுக்கு அரசியல் ரீதியாக பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com