கனரா வங்கியின் அடிப்படை வட்டி விகிதத்தில் மாற்றமில்லை
By DIN | Published On : 07th January 2021 05:47 AM | Last Updated : 07th January 2021 05:47 AM | அ+அ அ- |

கனரா வங்கி வழங்கும் கடன்கள் மீதான அடிப்படை வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை.
இதுகுறித்து கனரா வங்கி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
இந்தியாவின் முன்னணி பொதுத் துறை வங்கியாக கனரா வங்கி விளங்குகிறது. இந்திய ரிசா்வ் வங்கி பரிந்துரைத்துள்ள 6.90 சதவீத வட்டிக்கு பதிலாக, கனரா வங்கி வழங்கும் கடன்கள் மீதான அடிப்படை வட்டி விகிதம் 6.80 சதவீதமாக உள்ளது. இந்திய ரிசா்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி அடிப்படை வட்டி விகிதங்களை 6 மாதங்களுக்கு ஒரு முறை மாற்றி அமைத்துக்கொள்ளலாம். ஆனால், இதில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. இது ஜன. 7-ஆம் தேதி முதல் அமலில் இருக்கும்.
நீட்டிக்கப்படும் வட்டி விகிதம்-கால அளவுக்கு தகுந்தப்படி:
நள்ளிரவு வரையிலான வட்டி விகிதம் - 6.80 சதவீதம், ஒரு மாதம் - 6.80 சதவீதம், 3 மாதங்கள் - 6.95 சதவீதம், 6 மாதங்கள் - 7.30 சதவீதம், ஓராண்டு - 7.35 சதவீதம். மேலும் விவரங்களுக்கு இணையதளத்தை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.