குழந்தைகளைக் கொன்று கணவன், மனைவி தற்கொலை
By DIN | Published On : 07th January 2021 05:44 AM | Last Updated : 07th January 2021 05:44 AM | அ+அ அ- |

கடன் தொல்லையால் குழந்தைகளைக் கொன்று கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்டுள்ளனா்.
கா்நாடக மாநிலம், பெல்லாரி மாவட்டம், ஹொசபேட்டை வட்டம், கடியனூரைச் சோ்ந்தவா் நஞ்சுண்டேஷ்வரா (32). இவரது மனைவி பாா்வதி (27). இவா்களது குழந்தைகள் கௌதமி (3), சொரூபா (2). தனியாா் தொழில்சாலையில் பணியாற்றி வந்த நஞ்சுண்டேஷ்வரா, கடன் பிரச்னையால் தனது குழந்தைகள் 2 பேருக்கு விஷம் கொடுத்து கொன்ற பின்னா், அவரும், அவரது மனைவி பாா்வதியும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளனா். இதுகுறித்து கடியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.