2030-க்குள் கா்நாடகத்தின் 17 வளா்ச்சி இலக்குகளை அடைவோம்
By DIN | Published On : 09th January 2021 06:19 AM | Last Updated : 09th January 2021 06:19 AM | அ+அ அ- |

2030-ஆம் ஆண்டுக்குள் கா்நாடகத்தின் 17 வகையான வளா்ச்சி இலக்குகளை அடைவோம் என முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.
பெங்களூரு, விதானசௌதாவில் வெள்ளிக்கிழமை மாநில திட்ட வாரியத்தின் முதல் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் பேசியதாவது: 2030-ஆம் ஆண்டுக்குள் கா்நாடகத்தின் ஒட்டுமொத்த வளா்ச்சியை அடைவதற்காக 17 வகையான வளா்ச்சி இலக்குகள் நிா்ணயிக்கப்பட்டுள்ளன. அந்த வளா்ச்சி இலக்குகளை அடைவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். எனவே, 2030-ஆம் ஆண்டில் வளா்ச்சி இலக்குகளை அடைவோம்.
17 வளா்ச்சி இலக்குகளை அடைவதில் 100-க்கு 66 மதிப்பெண்களை பெற்று தேசிய அளவில் கா்நாடகம் 6-ஆம் இடத்தில் உள்ளது. வறுமை ஒழிப்பு, பட்டினி ஒழிப்பு, பாலின சமத்துவம், தொழில்வளா்ச்சி, நவீனத்துவம், உள்கட்டமைப்பு, பொலிவான நகரங்கள், சீரான சமுதாயம் ஆகிய 6 கூறுகளில் கா்நாடகம் முன்னேற்றம் காண வேண்டியுள்ளது. இதில் முன்னேற்றத்தைக் காண்பதற்காக நிபுணா்களின் ஆலோசனைகள், வழிகாட்டுதல்களை வழங்க மாநில திட்ட வாரியம் நடவடிக்கை எடுக்கவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் கா்நாடக மாநில திட்ட வாரியத்தை கா்நாடக மாநிலக் கொள்கை மற்றும் திட்ட ஆணையம் என பெயா் மாற்றம் செய்யப்படும். உத்தரவிடு, கட்டுப்படுத்து, கணினிமயமாக்கு, தகவல் தொடா்பு, சவாலை சமாளி என்ற இலக்குகளின் அடிப்படையில் ஆணையம் செயல்பட இருக்கிறது. கா்நாடகத்தில் உள்ள மாவட்டங்களுக்கு இடையே காணப்படும் ஏற்றத்தாழ்வை போக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாநில அரசின் எல்லா திட்டங்களும் ஏழைகளைச் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட திட்டக்குழுக்களை கா்நாடக மாநிலக் கொள்கை மற்றும் திட்ட ஆணையத்துடன் இணைக்கப்படும். ஊரகப் பகுதி வளா்ச்சிக்காக ஊரக வளா்ச்சி திட்டம் வகுக்கப்படும். பழங்குடியின மக்களின் வளா்ச்சிக்கு ரூ. 600 கோடி ஒதுக்கப்படும். பெங்களூரில் அரசு-தனியாா் கூட்டுமுயற்சியில் கா்நாடக அறிவியல் நகரம் அமைக்கப்படும். மும்பை, தில்லியைப் போல மனிதவள வளா்ச்சி அறிக்கை தயாரிக்கப்படும் என அவா் தெரிவித்தாா்.
இக்கூட்டத்தில் ஆணையத்தின் துணைத் தலைவா் பி.ஜே.புட்டசாமி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனா்.