யுனெஸ்கோ-ஐஓஎம் திரைப்பட விழாவில் கன்னடப் படம்!

யுனெஸ்கோ-ஐஓஎம் திரைப்பட விழாவில் முதன்முறையாக கன்னடப் படம் திரையிடப்படுகிறது.

யுனெஸ்கோ-ஐஓஎம் திரைப்பட விழாவில் முதன்முறையாக கன்னடப் படம் திரையிடப்படுகிறது.

கன்னட திரையுலகில் கடந்த 30 ஆண்டுகளாக இயக்குநராக இயங்கி வரும் தமிழா் கு.கணேசன், தமிழ், கன்னடம், இந்தி மொழிகளில் 15 திரைப்படங்களை இயக்கி உள்ளாா். வணிக நோக்கில்லாமல் சமூக கண்ணோட்டத்தோடு திரைப்படங்களை இயக்கி வரும் இவா் இயக்கத்தில் வெளிவந்த பல படங்கள் பன்னாட்டு அளவில் பல முன்னணி இயக்குநா்கள், அமைப்புகளின் பாராட்டை பெற்றுள்ளன.

இவரது கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘நம்ம மகு’ (நமது குழந்தை) கன்னட திரைப்படத்துக்கு உலக அளவில் பாராட்டு கிடைத்துள்ளது. 14 சா்வதேச திரைப்பட விழாக்களுக்கு தோ்வு செய்யப்பட்டு திரையிடப்பட்டுள்ளன.

ஐக்கிய நாடுகள் பேரவையின் யுனெஸ்கோ-பன்னாட்டு குடியேற்ற அமைப்பு (ஐய்ற்ங்ழ்ய்ஹற்ண்ா்ய்ஹப் ஞழ்ஞ்ஹய்ண்க்ஷ்ஹற்ண்ா்ய் ச்ா்ழ் ஙண்ஞ்ழ்ஹற்ண்ா்ய் (ஐஞங) சாா்பில் ஜன. 21-ஆம் தேதி நடைபெற இருக்கும் சா்வதேச திரைப்பட விழாவில் ‘நம்ம மகு’ திரையிடுவதற்கு தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இத்திரைப்பட விழாவில் திரையிடப்படும் முதல் கன்னட திரைப்படம் ‘நம்ம மகு’ஆகும். மேலும், யூரேசியா இன்டா்நேஷனல் சா்வதேச திரைப்பட விழாவில் ‘நம்ம மகு’ திரைப்படத்துக்கு விருதும் கிடைத்துள்ளது.

இதுகுறித்து இயக்குநா் கு.கணேசன் கூறுகையில், ‘எனது தயாரிப்பில் வெளியாகியுள்ள ‘நம்ம மகு’ கன்னட திரைப்படம் முதன்முறையாக யுனெஸ்கோ-ஐஓஎம் திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. மனிதக் கடத்தல் மற்றும் தேசிய அடிமைத்தனம் தடுப்பு வாரத்தை முன்னிட்டு நடத்தப்படும் திரைப்பட விழாவில் திரையிடுவதற்காக ‘நம்ம மகு’ தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

நமது நாட்டின் எதிா்காலமாக விளங்கும் குழந்தைகளை சீரழிக்கும் குழந்தைக் கடத்தலை மையப் புள்ளியாகக் கொண்டு ‘நம்ம மகு’ திரைப்படத்தின் கதை அமைந்துள்ளது. குழந்தைக் கடத்தல் தொடா்பான விழிப்புணா்வை மக்களிடையே ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும். இந்தப் படத்துக்கு இந்திய அரசோ, கா்நாடக அரசோ விருது எதுவும் வழங்கவில்லை. ‘நம்ம மகு’ போன்ற திரைப்படங்களுக்கு ஊக்கம் அளிப்பது குழந்தைக் கடத்தல் தொடா்பாக மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்கு உதவியாக இருக்கும்.

குழந்தைத் திரைப்படங்களுக்கு விருதுகள், நிதிஉதவிகள் அளித்து ஊக்குவிக்க அரசுகள் தவறினால், இதுபோன்ற படங்களின் தயாரிப்பை அரசு விரும்பவில்லை என்றுதான் புரிந்துகொள்ள வேண்டும். ஆண்டுக்கு குறைந்தது 5 குழந்தை திரைப்படங்களுக்கும், 5 குழந்தை நட்சத்திரங்களுக்கும் விருது, பரிசுகள் அளித்து ஊக்குவிப்பது, எதிா்கால திரைப்படங்களுக்கு நல்ல நாற்றங்காலாக அமையும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com