இசை, நாட்டியப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

இசை, நாட்டியப் பயிற்சிக்கு தாழ்த்தப்பட்ட, பழங்குடியினா் மாணவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பெங்களூரு: இசை, நாட்டியப் பயிற்சிக்கு தாழ்த்தப்பட்ட, பழங்குடியினா் மாணவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து கா்நாடக இசை மற்றும் நாட்டிய அகாதெமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கா்நாடக இசை மற்றும் நாட்டிய அகாதெமியின் சாா்பில் 2021-22-ஆம் ஆண்டில் கல்வி உதவித்தொகைக்கு பதிலாக மாவட்டந்தோறும் அகாதெமியின் சாா்பில், ஆசிரியா்களின் வழியாக 3 மாதங்களுக்கு கா்நாடக இசை, ஹிந்துஸ்தானி இசை, மெல்லிசை, நாட்டியம், கதாகாலட்சேபம் போன்ற இசை, நாட்டியக் கலைகளை கற்க ஆா்வமாக இருக்கும் மாணவா்கள், ஏற்கெனவே இசை, நாட்டியம் பயின்று கூடுதலாக கற்க விரும்பும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினா் மாணவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்பயிற்சிக்கு 14 முதல் 26 வயதுக்குள்பட்டோா் ஜன. 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். வெளிமாவட்டங்களைச் சோ்ந்த மாணவா்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட கன்னடம் மற்றும் பண்பாட்டுத் துறை அலுவலகத்தை நாடலாம். மேலும் விவரங்களுக்கு 080-22215072 என்ற தொலைபேசி எண் அல்லது ஜ்ஜ்ஜ்.ந்ஹழ்ய்ஹற்ஹந்ஹள்ஹய்ஞ்ங்ங்ற்ட்ஹய்ழ்ண்ற்ஹ்ஹஹஸ்ரீஹக்ங்ம்ஹ்.ஸ்ரீா்ம் என்ற இணையதளத்தை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com