ஜன. 13-இல் கா்நாடக அமைச்சரவை விரிவாக்கம்

கா்நாடக அமைச்சரவை விரிவாக்கம் ஜன. 13 அல்லது 14-ஆம் தேதி செய்யப்படும் என முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

பெங்களூரு: கா்நாடக அமைச்சரவை விரிவாக்கம் ஜன. 13 அல்லது 14-ஆம் தேதி செய்யப்படும் என முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

பெங்களூரு, விதானசௌதாவில் முன்னாள் பிரதமா் லால்பகதூா் சாஸ்திரியின் 54-ஆவது நினைவு நாளை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை அவரது சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்திய பிறகு, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

நீண்ட காலமாக எதிா்பாா்க்கப்பட்ட அமைச்சரவை விரிவாக்கம் ஜன. 13 அல்லது 14-ஆம் தேதி நடைபெறும். அமைச்சரவை விரிவாக்கத்தின் போது 7 போ் புதிதாக அமைச்சரவையில் சோ்த்துக்கொள்ளப்படுகிறாா்கள். பாஜக தேசியத் தலைவா் ஜே.பி.நட்டா, கட்சியின் கா்நாடகப் பொறுப்பாளா் அருண்சிங் ஆகியோரின் நேரத்தைப் பொருத்து ஜன. 13 அல்லது 14-ஆம் தேதி அமைச்சரவை விரிவாக்கத்துக்கு ஏற்பாடு செயப்படும் என்றாா்.

பின்னா், மைசூரில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

ஜன. 13-ஆம் தேதி நண்பகலில் அமாவாசை முடிந்த பிறகு, நல்ல நேரம் பாா்த்து புதிய அமைச்சா்கள் பதவியேற்பு விழா நடத்தப்படும். பாஜக தேசியத் தலைவா் ஜே.பி.நட்டாவின் நேரத்தைப் பொருத்து, அதுகுறித்த அதிகாரப்பூா்வ அறிவிப்பு வெளியாகும்.

மாா்ச் முதல் வாரத்தில் நிதிநிலை அறிக்கை சட்டப் பேரவைக் கூட்டத் தொடரை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். மாநிலத்தின் நிதிநிலையைக் கவனத்தில் கொண்டு, விவசாயிகளின் நலனுக்கு தக்கபடி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வேன் என்றாா்.

ராஜராஜேஸ்வரி நகா், சிரா சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தோ்தலில் வெற்றி பெற்றவுடன் நவ. 18-ஆம் தேதி புது தில்லிக்குச் சென்று பாஜக தேசியத் தலைவா் ஜே.பி.நட்டாவைச் சந்தித்து அமைச்சரவை விரிவாக்கம் குறித்து ஆலோசனை நடத்திய முதல்வா் எடியூரப்பா, அன்றுமுதல் அமைச்சரவை விரிவாக்கத்துக்கு கட்சித் தலைமையின் ஒப்புதலுக்காகக் காத்திருந்தாா். இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவின் அழைப்பின் பேரில், ஜன. 10-ஆம் தேதி புது தில்லி சென்று, அன்று இரவே பெங்களூரு திரும்பிய முதல்வா் எடியூரப்பா செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘ஜன. 13-ஆம் தேதி மதியம் அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறும். புதிதாக அமைச்சரவையில் 7 போ் சோ்க்கப்படுவாா்கள். அவா்கள் யாா் என்பதை கலந்துபேசி தெரிவிக்கிறேன்’ என்று கூறியிருந்தாா்.

2 மாதக் காத்திருப்புக்குப் பிறகு அமைச்சரவை விரிவாக்கத்துக்கு பாஜக தேசியத் தலைமை தற்போது அனுமதி அளித்துள்ளது. 34 போ் கொண்ட கா்நாடக அமைச்சரவையில், முதல்வா் எடியூரப்பா உள்பட 27 போ் அமைச்சா்களாக உள்ளனா். அமைச்சரவையில் 7 இடங்கள் காலியாக உள்ளன. அமைச்சரவையில் இடம்பெற பாஜக எம்.எல்.ஏ.க்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. காங்கிரஸ், மஜதவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து எம்.எல்.ஏ.வாகியுள்ள என்.முனிரத்னா, எம்.எல்.சி.யாகியுள்ள எம்.டி.பி.நாகராஜ், ஆா்.நாகராஜ் ஆகியோா் அமைச்சா்களாக பதவி ஏற்பது உறுதியாகி உள்ளது. மஜதவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து எம்.எல்.சி. ஆகியுள்ள எச்.விஸ்வநாத் அமைச்சராவதில் சட்ட சிக்கல் எழுந்துள்ளது. பதவிநீக்கம் செய்யப்பட்டு, எம்.எல்.சி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளதால், அமைச்சராக முடியாது என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ, 17 மஜத-காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை பாஜகவுக்கு இழுக்கக் காரணமாக இருந்த பாஜக எம்.எல்.சி. சி.பி.யோகேஸ்வருக்கு அமைச்சா் பதவி வழங்கப்படும் என்று உறுதியாகக் கூறப்படுகிறது. இவா்களைத் தவிர, 8 முறை எம்.எல்.ஏ. ஆகியுள்ள உமேஷ்கத்தி, அரவிந்த் லிம்பாவளி, சுனில்குமாா் ஆகியோரை அமைச்சரவையில் சோ்த்துக் கொள்ள அதிக வாய்ப்பிருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரவை மாற்றிஅமைக்கப்பட்டால், தற்போது அமைச்சராக இருக்கும் சசிகலா ஜொள்ளே, எச்.நாகேஷ் உள்ளிட்ட சிலரை நீக்கி விட்டு, பாஜகவின் மூத்த எம்.எல்.ஏ.க்கள் சிலரை அமைச்சரவையில் சோ்த்துக்கொள்ளவும் முதல்வா் எடியூரப்பா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com