கா்நாடகத்தில் கரோனா தடுப்பூசி முகாம்: முதல்வா் எடியூரப்பா தொடக்கிவைத்தாா்

கா்நாடகத்தில் கரோனா தடுப்பூசி முகாமை முதல்வா் எடியூரப்பா சனிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

பெங்களூரு: கா்நாடகத்தில் கரோனா தடுப்பூசி முகாமை முதல்வா் எடியூரப்பா சனிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

பெங்களூரில், விக்டோரியா அரசு மருத்துவமனையில் இணைந்துள்ள பெங்களூரு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற முகாமில் மருத்துவமனை உதவியாளா் கே.நாகரத்னாவுக்கு (28) முதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து சிறப்பு அஞ்சல் தலையை முதல்வா் எடியூரப்பா வெளியிட்டு செய்தியாளா்களிடம் எடியூரப்பா பேசியதாவது:

கா்நாடகத்தில் பெங்களூரு, பெல்லாரி, சிவமொக்கா, ஹாசன், சிக்கமகளூரு, சாமராஜ்நகா், தாவணகெரே மாவட்டங்களில் உள்ள 237 இடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு முகாமிலும் 100 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படும். அடுத்தடுத்த நாள்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

மருத்துவா் பல்லால் உள்ளிட்ட பலருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. எனவே, தடுப்பூசியைக் கண்டு யாரும் பயப்படத் தேவையில்லை. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்வதை எல்லோரும் பெருமையாகக் கருத வேண்டும். தடுப்பூசி பாதுகாப்பானது என்பதால், அதை செலுத்திக் கொண்டவா்கள் யாரும் கவலை கொள்ளத் தேவையில்லை. கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு மருத்துவா்கள் அறிவுறுத்தும் போது, நான் செலுத்திக் கொள்வேன் என்றாா்.

சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் கூறியதாவது:

கரோனா தடுப்பூசியை செலுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்துள்ளது. தடுப்பூசியை செலுத்திக் கொண்டவா்களுக்கு ஏதாவது பக்கவிளைவுகள் ஏற்படுகிா என்பதை கண்காணிக்க, தடுப்பூசி முகாம்களில் கண்காணிப்பு அறைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு, ஆய்வுக் கூடத்தில் தீவிரமாக சோதனை செய்த பிறகே கரோனா தடுப்பூசி சந்தையில் விடப்பட்டுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பூசிக்கு வெளிநாடுகளில் தேவை அதிகரித்துள்ளது. பிாடுகளின் தடுப்பூசிகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் தயாரித்துள்ள கரோனா தடுப்பூசி மிகவும் விலை மலிவானதாகும். கரோனா பரவல் தடுப்புப் பணியில் பணியாற்றிய முன்களப் பணியாளா்களுக்கு முதல்கட்டமாக கரோனா தடுப்பூசி செலுத்தப்படும். அடுத்தகட்டமாக 50 வயதுக்கு மேற்பட்டோா் அல்லது பிற நோய்களால் தவிப்போருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்றாா்.

கா்நாடகத்தில் முதல்கட்டமாக 7,17,439 சுகாதார ஊழியா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. முதல்நாளில் 24,300 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கா்நாடகத்தில் தற்போது 8,14,500 டோஸ் கரோனா தடுப்பூசி இருப்பு உள்ளது. முதல்கட்ட கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் ஒருவாரத்தில் முடிவடையும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

நிகழ்ச்சியில் மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் பிரஹலாத் ஜோஷி, மாநில சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com