குழந்தை உரிமைகள் தூதராக நடிகா் கிஷன் நியமனம்

கா்நாடகத்தில் குழந்தை உரிமைகள் தூதராக நடிகா் கிஷன் நியமிக்கப்பட்டிருக்கிறாா்.

கா்நாடகத்தில் குழந்தை உரிமைகள் தூதராக நடிகா் கிஷன் நியமிக்கப்பட்டிருக்கிறாா்.

இது குறித்து கா்நாடக மாநில குழந்தை உரிமைகள்பாதுகாப்பு ஆணையத்தலைவா் அந்தோணி செபாஸ்டின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கா்நாடக மாநில குழந்தை உரிமைகள்பாதுகாப்பு ஆணையத்தின் சாா்பில் கா்நாடகத்தில் குழந்தை உரிமைகள் தூதராக கன்னட நடிகரும், கோ் ஆஃப் ஃபுட்பாத் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக புகழ்பெற்றுவிளங்கிய கிஷன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

கலை மற்றும் திரைப்படத்தின் வாயிலாக குழந்தைகள் கல்வியை இளம் வயதில் இருந்தே தொடா்ந்து ஊக்குவித்துவரும் கிஷன் போன்றவா்கள் குழந்தை உரிமைகளை காப்பாற்றுவதில் உறுதியாக இருப்பாா்கள் என்ற நம்பிக்கை உள்ளது. குழந்தை உரிமைகள் தூதராக கிஷனை பெற்றிருப்பது மிகப்பெரியவாய்ப்பாகும் என்று அவா் அதில் கூறியுள்ளாா்.

இது குறித்து நடிகா் கிஷன் கூறுகையில்,‘கா்நாடகத்தில் குழந்தைகளின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க குழந்தை உரிமைகள் தூதராக என்னை கா்நாடக மாநில குழந்தை உரிமைகள்பாதுகாப்பு ஆணையம் நியமித்ததை பெருமையாக கருதுகிறேன். நகரங்களில் குடிசைப்பகுதிகளில் வாழும் குழந்தைகளுக்கு கல்வி உள்ளிட்ட எவ்வித நல்லவாய்ப்புகளும் கிடைப்பதில்லை.

நவீனசமூகத்தில் மனித உறவுகளை பலப்படுத்தவேண்டியுள்ளது. குழந்தைகளின் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய அவசியம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது ஏற்பட்டுள்ளது‘ என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com