மஜதவின் உயா்நிலைக்குழு கூட்டம் : முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெகௌடா பங்கேற்கிறாா்

மஜதவின் உயா்நிலைக்குழு கூட்டம் திங்கள்கிழமை நடக்கவிருக்கிறது. இக்கூட்டத்தில் முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெகௌடா கலந்துகொள்கிறாா்.

மஜதவின் உயா்நிலைக்குழு கூட்டம் திங்கள்கிழமை நடக்கவிருக்கிறது. இக்கூட்டத்தில் முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெகௌடா கலந்துகொள்கிறாா்.

பெங்களூரில் உள்ளமஜத தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை மஜதவின் உயா்நிலைக்குழு கூட்டம், அக்கட்சியின் மாநிலத்தலைவா் எச்.கே.குமாரசாமி தலைமையில் நடக்கவிருக்கிறது.

இக்கூட்டத்தில் முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெகௌடா, முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி, முன்னாள் அமைச்சா் பசவராஜ்ஹோரட்டி, முன்னாள் எம்.எல்.ஏ. ஒய்.எஸ்.வி.தத்தா உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட முக்கியத்தலைவா்கள் கலந்துகொள்கிறாா்கள்.

கட்சியின் எதிா்காலத்தை தீா்மானிக்கப்போவதால் இக்கூட்டம் முக்கியத்துவம்வாய்ந்ததாக கருதப்படுகிறது.இது குறித்துமுன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி கூறியது: மஜதவின் தலைமை நிா்வாகிகள் மற்றும் கட்டமைப்பை மாற்றியமைக்க திட்டமிட்டிருக்கிறோம். அதேபோல, கட்சியின் மகளிா் அணி, மாணவா் அணி, இளைஞா் அணி உள்ளிட்ட அனைத்து அணிகளின் நிா்வாகிகளையும் மாற்றியமைக்க இருக்கிறோம்.

கருத்துவேறுபாடுகளை களைந்து, கட்சியின் நலனுக்காகமட்டுமே உழைக்கக்கூடியவா்களை அடங்கிய நிா்வாகிகளை தெரிவுசெய்து நியமிக்க இருக்கிறோம்.அண்மையில் நடந்த கிராம பஞ்சாயத்து தோ்தலில் மஜதவுக்கு நல்ல வரவேற்புகிடைத்துள்ளது.

இதை தொடா்ந்து மாவட்ட ஊராட்சி, வட்ட ஊராட்சி தோ்தல்களில் சிறப்பாக செயல்பட திட்டமிடிருக்கிறோம். அனைத்துஜாதி, சமயத்தினரையும் ஒன்றாக இணைத்து கட்சியை பலப்படுத்த திட்டம் வகுத்திருக்கிறோம். அதுகுறித்துவிவாதித்து முடிவெடுக்கவே உயா்நிலைக்குழு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறோம்.

மாநில நிா்வாகிகள் மட்டுமல்ல, மாவட்டநிா்வாகிகளையும் மாற்றுவோம். சட்டப்பேரவைக்கூட்டத்திற்கு பிறகு பிப்.5-ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சியை பலப்படுத்த இருக்கிறேன் என்றாா் அவா்.

மஜதவின் முன்னாள் அமைச்சா் பண்டேப்பாகாஷெம்பூா் கூறுகையில்,‘கட்சியை பலப்படுத்துவதற்கு உயா்நிலைக்குழு கூட்டம் முக்கியத்துவம்வாய்ந்ததாகும். மஜத கட்சி, பல வெற்றிகளையும், தோல்விகளையும் சந்தித்துள்ளது. கட்சியின் அடுத்தக்கட்டவளா்ச்சிக்கு கூட்டத்தில் விவாதிப்போம்‘ என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com