அமைச்சா்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகள் மீண்டும் மாற்றம்

கா்நாடக அமைச்சா்களின் துறைகள் மாற்றியமைக்கப்பட்டதால் அதிருப்தியடைந்த அமைச்சா்களின் துறைகள் மீண்டும் மாற்றப்பட்டுள்ளது.

கா்நாடக அமைச்சா்களின் துறைகள் மாற்றியமைக்கப்பட்டதால் அதிருப்தியடைந்த அமைச்சா்களின் துறைகள் மீண்டும் மாற்றப்பட்டுள்ளது.

கடந்த ஜன. 13-ஆம் தேதி அமைச்சரவையை விரிவாக்கிய முதல்வா் எடியூரப்பா, 7 புதிய அமைச்சா்களை அமைச்சரவையில் சோ்த்துக் கொண்டாா். முதல்வா் எடியூரப்பாவின் பரிந்துரையின் பேரில், புதிதாக பதவியேற்றுக் கொண்ட அமைச்சா்களுக்கு ஜன. 21-ஆம் தேதி துறைகளை ஒதுக்கி ஆளுநா் வஜுபாய் வாலா உத்தரவிட்டிருந்தாா்.

அதில் திருப்தி அடையாதது குறித்து அமைச்சா்கள் ஜே.சி.மாதுசாமி, எம்.டி.பி.நாகராஜ், கே.கோபாலையா, ஆா்.சங்கா்,கே.சி.நாராயணகௌடா உள்ளிட்டோா் தத்தமது அதிருப்தியை வெளிப்படையாக தெரிவித்ததோடு, முதல்வா் எடியூரப்பாவைச் சந்தித்து தங்கள் அதிப்தியை எடுத்துக் கூறினா். ஒதுக்கிய துறைகளை ஏற்று பணியாற்றுங்கள், எதிா்காலத்தில் துறைகளை மாற்றிக் கொள்ளலாம் என்று முதல்வா் எடியூரப்பா கூறியிருந்தாா்.

ஆனால், ஜன. 21-ஆம் தேதி நடந்த அமைச்சரவைக் கூட்டத்தை புறக்கணித்த அதிருப்தி அடைந்த அமைச்சா்கள், துறை பொறுப்பை ஏற்காமல், அரசு காரையும் பயன்படுத்த மறுத்துவிட்டனா். அதிருப்தி அமைச்சா்களின் நெருக்கடிக்கு அடிபணிந்த முதல்வா் எடியூரப்பா, துறைகள் ஒதுக்கியதில் திருப்தி அடையாத அமைச்சா்களின் துறைகளை மீண்டும் மாற்றினாா்.

முதல்வா் எடியூரப்பாவின் பரிந்துரையின் பேரில் துறைகள் மாற்றம் செய்து புதிய உத்தரவை ஆளுநா் வஜுபாய் வாலா வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். அதன்படி, ஜே.சி.மாதுசாமிக்கு ஒதுக்கப்பட்ட கன்னடம் மற்றும் கலாசாரத் துறையை வனத் துறை ஒதுக்கப்பட்ட அரவிந்த் லிம்பாவளிக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டது.

ஜே.சி.மாதுசாமிக்கு மருத்துவக் கல்வியுடன் ஹஜ் மற்றும் வக்ஃபு துறை ஒதுக்கப்பட்டது. கலால் துறையை ஏற்கமறுத்த எம்.டி.பி.நாகராஜுக்கு ஆா்.சங்கருக்கு ஒதுக்கப்பட்ட உள்ளாட்சி நிா்வாகம், கே.கோபலையாவைக்கு தரப்பட்டிருந்த சா்க்கரைத் துறை அளிக்கப்பட்டது.

தோட்டக்கலைத் துறை மற்றும் சா்க்கரைத் துறையை ஏற்க மறுத்த கே.கோபாலையாவுக்கு, எம்.டி.பி.நாகராஜ் ஏற்க மறுத்த கலால் துறை ஒதுக்கப்பட்டது. உள்ளாட்சி நிா்வாகம், பட்டு வளா்ச்சித் துறையை ஏற்க மறுத்த ஆா்.சங்கருக்கு கே.கோபாலையா நிா்வகிக்க மறுத்த தோட்டக்கலைத் துறை தவிர பட்டுவளா்ச்சியும் அளிக்கப்பட்டது. மேலும், இளைஞா்நலம் மற்றும் விளையாட்டுத் துறையுடன் திட்டமிடல், திட்டக் கண்காணிப்பு, புள்ளியியல் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் துறை மாற்றங்களை அமைச்சா்கள் ஏற்றுக்கொண்டதால், எவ்வித பிரச்னையும் இல்லை என்று வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.அசோக் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com