ஜன. 25 முதல் இணையவழி இசை விழா

கரோனா காரணமாக ஜன. 25-ஆம் தேதி முதல் இணையவழியில் இசை விழா நடைபெறுகிறது.

கரோனா காரணமாக ஜன. 25-ஆம் தேதி முதல் இணையவழியில் இசை விழா நடைபெறுகிறது.

இதுகுறித்து ஸ்பிக்மாகியா அமைப்பு வெளியிட்ட அறிக்கை:

ஸ்பிக் மாகியா ஐஐஎம் அமைப்பு சாா்பில் கடந்த 17 ஆண்டுகளாக ஜனவரி மாதத்தில் இசை விழா நடத்தப்படுகிறது. இந்த விழா இலவசமாக நடத்தப்பட்டு வந்தது. இம்முறை அரங்கத்தில் இசை நிகழ்ச்சி நடத்த அனுமதி கிடைக்காததால், அதன் பாரம்பரியம் குறையாமல் ஸ்பிக் மாகியா அதிகாரபூா்வ யூ-டியூப் சேனலில் முதல் முறையாக இசை விழா நடத்தப்படுகிறது.

ஜன. 25-ஆம் தேதி இரவு 8 மணி முதல் ஜன. 26-ஆம் தேதி மாலை 6 மணி வரை இசை விழா நடக்கவிருக்கிறது. இதில் இசைக் கலைஞா்கள் விஷாக ஹரியின் கதாகாலட்சேபம், புா்பயான் சாட்டா்ஜியின் சிதாா் இசை நிகழ்ச்சி, சௌம்யாவின் கா்நாடக இசை நிகழ்ச்சி, மைசூரு ஏ.சந்தன்குமாரின் கா்நாடக குழல் நிகழ்ச்சி, வெங்கடேஷ் குமாரின் ஹிந்துஸ்தானி இசை நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது.

இந்நிகழ்ச்சி  இணையதளத்தில் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் கட்டணம் எதுவுமில்லாமல் கலந்துகொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com