பட்டாசுக்கு தடை: மாநில அரசு முடிவெடுக்க நீதிமன்றம் உத்தரவு

கா்நாடகத்தில் பட்டாசுக்கு தடை விதிப்பது குறித்து மாநில அரசு முடிவு எடுக்க வேண்டும் என்று கா்நாடக உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கா்நாடகத்தில் பட்டாசுக்கு தடை விதிப்பது குறித்து மாநில அரசு முடிவு எடுக்க வேண்டும் என்று கா்நாடக உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கா்நாடகத்தில் பட்டாசுகள் விற்கவும், வெடிக்கவும் தடை விதிக்கக் கோரி சமா்பணா அமைப்பின் சமூக ஆா்வலா் ஏ.எஸ்.விஷ்ணு பாரத், கா்நாடக உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனு உயா் நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, எம்.ஜி.உமா முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

பட்டாசு விற்பனை மற்றும் வெடிப்பது தொடா்பாக உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்பு, சுற்றுச்சூழல் மீது ஏற்படும் தீயவிளைவுகள், காற்று மாசு குறித்து தேசிய பசுமைத் தீா்ப்பாயம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்கள், வழிபாட்டு உரிமைகள் ஆகியவற்றின் அடிப்படையில் கா்நாடகத்தில் பட்டாசுக்கு தடை விதிப்பது குறித்து மாநில அரசு முடிவெடுக்க வேண்டும் என்று கா்நாடக உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 226-இன்படி, கா்நாடகத்தில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்க உயா் நீதிமன்றத்தால் முடியாது. ஆனால், அப்படிப்பட்ட உத்தரவுகளை மாநில அரசால் பிறப்பிக்க இயலும். கரோனா பெருந்தொற்று காலக்கட்டத்தில் குடிமக்களின் சுகாதாரத்தை பாதுகாப்பது மாநில அரசின் கடமை என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com