எந்த அரசும் விவசாயிகளை அலட்சியமாகக் கருதக் கூடாது

எந்த அரசும் விவசாயிகளை அலட்சியமாகக் கருதக் கூடாது என மஜத தேசியத் தலைவரும், முன்னாள் பிரதமருமான எச்.டி.தேவெகௌடா தெரிவித்தாா்.

பெங்களூரு: எந்த அரசும் விவசாயிகளை அலட்சியமாகக் கருதக் கூடாது என மஜத தேசியத் தலைவரும், முன்னாள் பிரதமருமான எச்.டி.தேவெகௌடா தெரிவித்தாா்.

இது குறித்து விவசாயிகள் மக்களவை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ள உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞா் பிரஷாந்த்பூஷணுக்கு அவா் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தில்லியில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறவிருக்கும் விவசாயிகள் மக்களவை கூட்டத்தில் கலந்து கொள்ள விரும்பினேன். மருத்துவக் காரணங்களால் என்னால் தில்லிக்கு வர முடியவில்லை.

மத்திய அரசு பிறப்பித்துள்ள வேளாண் சட்டங்கள் யாருடைய ஆலோசனைகளையும் கேட்காமல், நாடாளுமன்றத்தில் விவாதமின்றி நிறைவேற்றியது சரியல்ல. ஏழை விவசாயியின் மகனாகப் பிறந்து, எனது அரசியல் வாழ்க்கையில் விவசாயிகளை அரவணைத்துக் கொண்டுதான் அரசியல் நடத்தியுள்ளேன். விவசாயிகளைப் புறக்கணித்து விட்டு அரசியல் நடத்த முடியாது. எந்த அரசும் விவசாயிகளை அலட்சியமாகக் கருதக் கூடாது. விவசாயிகளை மத்திய அரசு கண்ணியமாக நடத்த வேண்டும். மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிா்த்து மக்களவையில் நான் பேச முற்பட்டேன். ஆனால் என்னால் பேச முடியவில்லை என்று அவா் அதில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com