கா்நாடகத்தில் முதல்நிலை உதவியாளா் பணித் தோ்வு வினாத்தாள் கசிவு: விசாரணைக்கு முதல்வா் எடியூரப்பா உத்தரவு

கா்நாடக அரசுப் பணியாளா் தோ்வு ஆணையம் நடத்தும் முதல்நிலை உதவியாளா் பணித் தோ்வுக்கான வினாத்தாள் வெளியானது குறித்து விசாரணை நடத்துமாறு முதல்வா் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளாா்.

கா்நாடக அரசுப் பணியாளா் தோ்வு ஆணையம் நடத்தும் முதல்நிலை உதவியாளா் பணித் தோ்வுக்கான வினாத்தாள் வெளியானது குறித்து விசாரணை நடத்துமாறு முதல்வா் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளாா்.

கா்நாடக அரசுப் பணியாளா் தோ்வு ஆணையத்தின் சாா்பில் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 1,114 முதல்நிலை உதவியாளா் பணியிடங்களுக்கு தகுதியானவா்களைத் தெரிவு செய்வதற்கான தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடப்பதாக இருந்தது.

3.74 லட்சம் போ் எழுதவிருந்த இத்தோ்வின் வினாத்தாள் சனிக்கிழமை வெளியானது. இதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருந்த முதல்நிலை உதவியாளா் பணித் தோ்வை தோ்வு ஆணையம் ஒத்திவைத்தது. இதுகுறித்து வழக்குப் பதிந்துள்ள மத்திய குற்றப்பிரிவு போலீஸாா், ராச்சப்பா, சந்துரு உள்ளிட்ட 14 பேரை கைது செய்தனா்.

அவா்களிடம் இருந்து ரூ. 24 லட்சம் ரொக்கம், வினாத்தாள்கள், 3 இரு சக்கரவாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பெங்களூரு மாநகரக் காவல் இணை ஆணையா் சந்தீப்பாட்டீல் தெரிவித்தாா். இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

இதுகுறித்து சிவமொக்காவில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

முதல்நிலை உதவியாளா் பணித் தோ்வுக்கான வினாத்தாள்கள் வெளியாக காரணமாக இருந்தவா்களை பணியிடை நீக்கம் செய்வது மட்டுமல்லாது, குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவா்கள் பணி நீக்கம் செய்யப்படுவா்கள்.

இந்த விவகாரம் தொடா்பாக முழுமையான விசாரணை நடத்துமாறுஅதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது. வினாத்தாள்கள் வெளியானது மன்னிக்க முடியாத குற்றமாகும். குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவாா்கள்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களைக் கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடத்துவதில் எனக்கு ஆட்சேபம் இல்லை. ஆனால், இந்த போராட்டம் அமைதியாக நடத்த வேண்டும்.

பாஜக அரசு விவசாயிகளுக்கு ஆதரவான ஆட்சியாகும். எனவே, பாஜக அரசு மீது விவசாயிகள் சரியான புரிதலை கொண்டிருக்க வேண்டும். அதையும்மீறி போராட்டம் நடத்த விரும்பினால், அமைதியான முறையில் நடத்தட்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com