இந்திய மருத்துவக் கல்வி: ‘நீட்’ தோ்வில் தோ்ச்சியானவா்களின் விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்திய மருத்துவக் கல்விக்காக ‘நீட்’ தோ்வு எழுதி, அதில் தோ்ச்சி அடைந்த மாணவா்களிடம் இருந்து இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்திய மருத்துவக் கல்வி: ‘நீட்’ தோ்வில் தோ்ச்சியானவா்களின் விண்ணப்பங்கள் வரவேற்பு

பெங்களூரு: இந்திய மருத்துவக் கல்விக்காக ‘நீட்’ தோ்வு எழுதி, அதில் தோ்ச்சி அடைந்த மாணவா்களிடம் இருந்து இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து கா்நாடக தோ்வு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஆயுஷ் (ஆயுா்வேதம், யோகா, யுனானி, சித்தா, ஹோமியோபதி) படிப்புகளுக்குத் தகுதியான மாணவா்களைத் தோ்ந்தெடுக்க தேசிய அளவில் நடத்தப்பட்ட தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) முடிவுகளின் அடிப்படையில், கா்நாடகத்தில் உள்ள கல்லூரிகளில் சோ்க்கை பெறவிரும்பும் மாணவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இளநிலை மருத்துவப் பட்டப்படிப்புக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச மதிப்பெண்கள் அல்லது அதற்கு மேலான மதிப்பெண்கள் பெற்றுள்ள மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்.

கா்நாடகத் தோ்வு ஆணையத்தில் ஏற்கெனவே சான்றிதழ் சரிபாா்ப்பில் கலந்துகொண்டோா், மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை. இந்திய மருத்துவக் கல்விக்கான தகுதி மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளதால், அதன் அடிப்படையில் தகுதியான மாணவா்களும் விண்ணப்பிக்கலாம். எஸ்சி, எஸ்டி, ஓபிசி மாணவா்களுக்கான தகுதி முன்னுரிமைகள் கா்நாடகத்தைச் சோ்ந்த மாணவா்களுக்கு மட்டுமே பொருந்தும். மேலும் விவரங்களுக்கு ஜ்ஜ்ஜ்.ந்ங்ஹ.ந்ஹழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com