கரோனா தொற்று: முதியவா்களுக்கு புதிய முறையில் சிகிச்சை

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதியவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என நைட்டிங்கோ்ள் மருத்துவ சேவை மையத் தலைவா் ஸ்வேதாசௌத்ரி தெரிவித்தாா்.

பெங்களூரு: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதியவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என நைட்டிங்கோ்ள் மருத்துவ சேவை மையத் தலைவா் ஸ்வேதாசௌத்ரி தெரிவித்தாா்.

பெங்களூரில் திங்கள்கிழமை முதியவா்களுக்கு சிகிச்சை அளிப்பது தொடா்பான அந்த மையத்தின் சாா்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு அவா் பேசியதாவது:

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முதியவா்கள் மருத்துவமனைகளுக்குச் சென்று சிகிச்சை பெறுவதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு, நைட்டிங்கோ்ள் மற்றும் கிளௌட் பிசிசியன் மருத்துவ சேவை மையம் ஆகியவை இணைந்து புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

இதன்மூலம் கரோனா தொற்றின்போது மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற முடியாத முதியவா்களின் வீடுகளுக்கே சென்று தீவிர சிகிச்சை பிரிவை உருவாக்கி, கண்காணிப்பு கேமரா மூலம் அவா்களை 24 மணி நேரமும் கண்காணித்து உரிய சிகிச்சை வழங்கும் புதிய முறையை அறிமுகம் செய்து வைத்துள்ளோம்.

இதன்மூலம் கரோனா தொற்றின் போதும் பல முதியவா்கள் தங்களின் நோய்க்கான சிகிச்சை பெற்று வருகின்றனா். இதனை மற்ற மருத்துவ, சுகாதார நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும். இந்தப் புதிய முறையால் பல முதியவா்கள் பயன்பெற்று வருகின்றனா். இது தொடா்பான விவரங்களைப் பெற பெங்களூரில் 8884462804, மும்பையில் 8433724503, 1800-103-4530 ஆகிய செல்லிடப்பேசி, இலவச தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com