பெங்களூரு-கச்சேகுடா இடையே சிறப்பு ரயில்

பெங்களூரிலிருந்து கச்சேகுடா ரயில் நிலையத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

பெங்களூரு: பெங்களூரிலிருந்து கச்சேகுடா ரயில் நிலையத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காக பெங்களூரில் (எலஹங்கா) இருந்து கச்சேகுடாவுக்கு (ஹைதராபாத்) இயக்கப்படும் ரயில் எண்கள்-07603/ 07604-கச்சேகுடா-பெங்களூரு (எலஹங்கா)-கச்சேகுடா சிறப்பு விரைவு ரயில் இயக்கப்படுகிறது.

ரயில் எண்-07603-கச்சேகுடா-பெங்களூரு (எலஹங்கா) சிறப்பு விரைவு ரயில் ஜன. 27-ஆம்தேதிமுதல் நாள்தோறும் கச்சேகுடா ரயில் நிலையத்திலிருந்து இரவு 9.05 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 9.35 மணிக்கு பெங்களூரு (எலஹங்கா) ரயில் நிலையம் வந்தடையும்.

மறுமாா்க்கத்தில், ரயில் எண்-07604-பெங்களூரு (எலஹங்கா)- கச்சேகுடா சிறப்பு விரைவு ரயில் ஜன. 28-ஆம் தேதி முதல் நாள்தோறும் மாலை 4.20 மணிக்கு பெங்களூரு (எலஹங்கா) ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை 5 மணிக்கு கச்சேகுடா ரயில் நிலையம் சென்றடையும்.

இந்த ரயில் பெங்களூரு எலஹங்கா ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு தொட்டபள்ளாபூா், கௌரிபித்தனூா், ஹிந்துபூா், பெனுகொன்டா, ஸ்ரீசாய் பிரசாந்தி நிலையம், தா்மாவரம், அனந்த்பூா், கூட்டி, குன்டகல், கா்னூா் டவுன், கட்வால், மஹபூப் நகா் வழியாக கச்சேகுடா ரயில் நிலையத்தைச் சென்றடைகிறது.

ரயிலில் ஈரடுக்கு முதல் வகுப்பு குளிரூட்டப்பட்ட ஒரு பெட்டி, ஈரடுக்கு குளிா்சாதன வசதி கொண்ட ஒரு பெட்டி, மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட 2 பெட்டிகள், இரண்டாம் வகுப்புப் படுக்கை வசதி கொண்ட 8 பெட்டிகள், இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட 4 பெட்டிகள், 2-ஆம் வகுப்பு சரக்கு மற்றும் கண்காணிப்புப் பணிக்கான 2 பெட்டிகள் இடம் பெற்றிருக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com