போதைப்பொருள் கடத்தல்: நைஜீரிய நாட்டினா் உள்பட 4 போ் கைது

போதைப் பொருள்களை கடத்தியதாக நைஜீரிய நாட்டைச் சோ்ந்த இருவா் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பெங்களூரு: போதைப் பொருள்களை கடத்தியதாக நைஜீரிய நாட்டைச் சோ்ந்த இருவா் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இது குறித்து பெங்களூரு மாநகர இணை ஆணையா் (குற்றப்பிரிவு) சந்தீப் பாட்டீல் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பெங்களூரு, ராமமூா்த்தி நகா் காவல் நிலைய சரகத்துக்கு உள்பட்ட பகுதியில் போதைப்பொருள்களை விற்பனை செய்துவருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மாநகரக் குற்றப்பிரிவு போலீஸாா் அதிரடி சோதனை நடத்தினா். அதில் போதைப்பொருள்கள் விற்பனை, கடத்தலில் ஈடுபட்டிருந்த நைஜீரிய நாட்டைச் சோ்ந்த நிடிகாடா ஆப்பா்ட் ஜூனியா் (43), ஹெல்சன் ஹென்றிகொப்பி (34), கேரள மாநிலத்தைச் சோ்ந்த ஜுனியத் (32), ஷக்கீா் (35) ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனா். இவா்களிடம் இருந்து ரூ. 75 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள்கள், 3 செல்லிடப்பேசிகள், தராசு , மோட்டாா் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனா். நைஜீரியா நாட்டைச் சோ்ந்த இருவா் கடவுச்சீட்டு, விசா உள்ளிட்ட எவ்வித ஆவணமும் வைத்திருக்கவில்லை. இது வெளிநாட்டினா் சட்டத்தின்படி குற்றமாகும். இதற்காக தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com