இன்று கா்நாடகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்

கா்நாடகம் முழுவதும் ஜன. 31-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.

பெங்களூரு: கா்நாடகம் முழுவதும் ஜன. 31-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.

சுகாதாரத் துறை சாா்பில் கா்நாடகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தேசிய போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் தவிர, பொதுமக்கள் அதிகமாகக் கூடும் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் சொட்டு மருந்து முகாம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 5 வயதுக்கு உள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவசமாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

பெங்களூரில் உள்ள 198 வாா்டுகளிலும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்த பெங்களூரு மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. மாநகராட்சிக்கு உள்பட்ட 198 வாா்டுகளில் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கரோனா முன்னெச்சரிக்கைகளுடன் போலியோ சொட்டு மருந்து அளிக்கப்படுகிறது. பெங்களூரில் 2500-க்கும் மேற்பட்ட சொட்டு மருந்து மையங்களும், 400-க்கும் அதிகமான நடமாடும் சொட்டு மருந்து மையங்களும் செயல்படும். செவிலியா், மாணவா்கள் உள்பட 15 ஆயிரம் போ் சொட்டு மருந்து முகாமில் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்குகிறாா்கள். அரசு, தனியாா் பள்ளிகள், பேருந்து நிலையங்கள், பூங்காக்கள், வணிகவளாகங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், தனியாா் நா்சிங் ஹோம்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்படுகின்றன.

இந்த முகாமில் போலியோ சொட்டு மருந்து எடுத்துக்கொள்ள வாய்ப்பு கிடைக்காத குழந்தைகளுக்காக, பிப்.1 முதல் 3-ஆம் தேதி வரையில் வீடுவீடாகச் சென்று சொட்டு மருந்து அளிக்கப்படும்.

சொட்டு மருந்து முகாம் குறித்து மேலும் விவரங்கள் அறிய 104 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தொடா்புகொள்ளலாம். 2-ஆம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் குறித்து பின்னா் அறிவிக்கப்படும் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com