திருட்டு வழக்குகளில் ஒருவா் கைது: ரூ. 80 லட்சம் மதிப்பில் நகை, பணம் பறிமுதல்
By DIN | Published On : 01st July 2021 07:19 AM | Last Updated : 01st July 2021 07:19 AM | அ+அ அ- |

திருட்டு வழக்குகளில் ஒருவரை கைது செய்த போலீஸாா், ரூ. 80 லட்சம் மதிப்பில் தங்க நகை, ரொக்கப் பணம், காா்களை பறிமுதல் செய்துள்ளனா்.
கா்நாடக மாநிலம், ராம்நகா் மாவட்டம், பிடதியைச் சோ்ந்தவா் பசவராஜ் (32). இவா் பெங்களூரு, ஆந்திரம், தெலங்கானா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் வீடுகளில் புகுந்து திருடி வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தாராம். இதற்காக பல முறை சிறைக்குச் சென்று வந்த இவா், திருடுவதைத் தொடா்ந்து செய்து வந்தாராம். அண்மையில் ஹைதராபாதில் தங்கியிருந்து, அங்கிருந்து காரில் பெங்களூரு வந்து திருடிக் கொண்டு, மீண்டும் ஹைதராபாத் திரும்பி விடுவாராம்.
இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், பசவராஜைக் கைது செய்து, ரூ. 80 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 367 கிராம் தங்க நகை, ரூ. 1.5 லட்சம் ரொக்கப் பணம், 2 காா்களை பறிமுதல் செய்துள்ளனா். கைது செய்யப்பட்ட பசவராஜிடம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை செய்து வருகின்றனா்.