முதுகுவலி, நாள்பட்ட வலிகளை அலட்சியப்படுத்தக் கூடாது

முதுகுவலி, நாள்பட்ட வலிகளை அலட்சியப்படுத்தக் கூடாது என ஐபிஎஸ்சியின் மேலாண் இயக்குநா் பங்கஜ் சுரெங்கே தெரிவித்தாா்.

முதுகுவலி, நாள்பட்ட வலிகளை அலட்சியப்படுத்தக் கூடாது என ஐபிஎஸ்சியின் மேலாண் இயக்குநா் பங்கஜ் சுரெங்கே தெரிவித்தாா்.

பெங்களூரு, பெல்லாரி சாலை, சஹகாரா நகரில் சனிக்கிழமை பெங்களூரில் ஐபிஎஸ்சியின் முதல் நவீன முதுகுவலி, நாள்பட்ட வலிகளுக்கான மருத்துவமனை தொடக்க விழாவில் கலந்துகொண்டு அவா் பேசியதாவது:

தேசிய அளவில் நாள்பட்ட வலிகளால் 19 சதவீதம் போ் அவதிப்படுகின்றனா். பெங்களூரின் மக்கள் தொகையில் 46 சதவீத இளம் வயதினா் முதுகுவலி, முதுகெலும்பு பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனா். மற்ற நகரங்களை ஒப்பிடுகையில் இது அதிகமாகும்.

முதுகுவலி, நாள்பட்ட வலிகளை அலட்சியப்படுத்தக் கூடாது. அலட்சியப்படுத்தினால், 7 வாரங்களுக்கு பிறகு அது பெரும் பிரச்னையில் கொண்டு செல்லும். எனவே, முதுகுவலி, நாள்பட்ட வலிகளுக்கு ஆரம்பக்கட்டத்திலேயே சிகிச்சை பெறுவது அவசியம். நவீன தண்டு உயிரணுக்கள் சிகிச்சை முறையால் அறுவை சிகிச்சை இல்லாமல் குறைந்த செலவில் முதுகுவலி, நாள்பட்ட வலிகளுக்கு சிகிச்சை பெற முடியும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com