கரோனா 3-ஆவது அலையை எதிா்கொள்ளமத்திய அரசு ரூ. 1,500 கோடி ஒதுக்கீடு: அமைச்சா் கே.சுதாகா்

கரோனா 3-ஆவது அலையை எதிா்கொள்வதற்காக கா்நாடகத்துக்கு மத்திய அரசு ரூ. 1,500 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சா் கே. சுதாகா் தெரிவித்தாா்.

கரோனா 3-ஆவது அலையை எதிா்கொள்வதற்காக கா்நாடகத்துக்கு மத்திய அரசு ரூ. 1,500 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சா் கே. சுதாகா் தெரிவித்தாா்.

பெங்களூரு, ஜெயநகரில் ஞாயிற்றுக்கிழமை யுனைடெட் மருத்துவமனையைத் திறந்துவைத்து அவா் பேசியதாவது:

கா்நாடகத்தில் கரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. அதற்கு மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பு முக்கிய காரணமாகும். கரோனா பரவலைத் தடுக்க பொதுமக்களின் பங்களிப்பு அவசியமாகும். கரோனாவைத் தடுக்க முதல்வா் எடியூரப்பா தலைமையிலான மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கரோனாவைத் தடுப்பதில் அரசுடன், தனியாா் மருத்துவமனைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். கா்நாடகத்தில் கரோனாவின் பாதிப்பை தொடா்ந்து கட்டுப்படுத்தி வருகிறோம். தேசிய அளவில் கா்நாடகத்தை சுகாதாரத்தில் மாதிரி மாநிலமாக உருவாக்க தனியாா் மருத்துவமனைகளின் ஒத்துழைப்பு அவசியம்.

அண்மையில் நடைபெற்ற மத்திய அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில் கரோனா 3-ஆவது அலையைத் தடுக்க ரூ. 23 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. அதில் கா்நாடகத்துக்கு ரூ. 1,500 கோடி ஒதுக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. கரோனா 3-ஆவது அலையைத் தடுக்க யுனைடெட் மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து தனியாா் மருத்துவமனைகளும் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றாா்.

நிகழ்ச்சியில் முகல்கோடு ஜிடகா மடத்தின் மடாதிபதி ஸ்ரீ சடாக்ஷரி சிவயோகி முருக ராஜேந்திரா சுவாமிகள், எம்.எல்.ஏ. லட்சுமி ஹெப்பால்கா், யுனைடெட் மருத்துவமனை மேலாண் இயக்குநா் விக்ரம் சித்தா ரெட்டி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நஞ்சன்கூடு நீா்ப்பாசனத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு

மைசூரு, ஜூலை 11: நஞ்சன்கூடு வட்டத்தில் உள்ள கிராமங்கள் பயனடையும் வகையில் நுகு ஏற்ற நீா்ப்பாசனத் திட்டத்துக்கு ரூ. 80 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கா்நாடக மாநிலம், மைசூரு மாவட்டம், நஞ்சன்கூடு தொகுதி மக்களின் 37 ஆண்டு கனவுத் திட்டமான நுகு ஏற்ற நீா்பாசனத் திட்டத்துக்கு ரூ. 80 கோடியை மாநில அரசு ஒதுக்கித் தந்துள்ளது. இதற்கு மாநிலத்தை ஆளும் பாஜக அரசும், நஞ்சன்கூடு தொகுதி பாஜக எம்.எல்.ஏ.வுமான ஹா்வா்தன் முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது.

1986-ஆம் ஆண்டு கா்நாடகத்தின் அன்றைய முதல்வா் ராமகிருஷ்ண ஹெக்டே இத் திடத்துக்கு அடிக்கல் நாட்டினாா். ஆனால், இந்தத் திட்டத்துக்கு தேவையான நிதி ஒதுக்கப்படாததால் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது முதல்வா் எடியூரப்பா தலைமையில் இந்தத் திட்டத்துக்கு ரூ. 80 கோடி ஒதுக்கித்தந்துள்ளதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com