5 ஆண்டுகால சட்டப்பட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

ஐந்து ஆண்டு கால சட்டப் பட்டப்படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஐந்து ஆண்டு கால சட்டப் பட்டப்படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்துபெங்களூரு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பெங்களூரு பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழக சட்டக் கல்லூரியில் 2021-22-ஆம் கல்வியாண்டில் 5 ஆண்டுகால பி.ஏ., எல்.எல்.பி. பட்டப் படிப்பில் (ஒருங்கிணைந்த பட்டப் படிப்பு) சேர விரும்பும் மாணவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 2-ஆம் ஆண்டு பியூசி அல்லது 12-ஆம் வகுப்பு தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்கள் விண்ணப்பிக்கலாம். இத்தோ்வில் குறைந்தபட்சமாக பொதுப்பிரிவினா் 45 சதவீதமும், தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினா் 40 சதவீதமும், ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்கு உட்பட்ட இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் 42 சதமும் மதிப்பெண்களும் பெற்றிருப்பது அவசியமாகும். இது கா்நாடகத்தைச் சோ்ந்த மாணவா்களுக்கு மட்டுமே பொருந்தும். 20 வயது நிறைவு பெறாத பொதுப் பிரிவினரும், 22 வயது நிறைவுபெறாத தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினா், பிற்படுத்தப்பட்டோா் வெளிநாட்டு மாணவா்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்களை இணையதளங்களில் பதிவு செய்யவேண்டும். அத்துடன் அந்த விண்ணப்பங்களை தரவிறக்கம் செய்து முதல்வா், பல்கலைக்கழக சட்டக்கல்லூரி, ஞானபாரதி வளாகம், பெங்களூரு பல்கலைக்கழகம், பெங்களூரு-560 056 என்ற முகவரிக்கு உரிய ஆவணங்கள் மற்றும் விண்ணப்பப் படிவ கட்டணத்திற்கான வங்கிவரைவோலையுடன் அனுப்பிவைக்க வேண்டும். பொதுப்பிரிவினருக்கு ரூ.850, தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினருக்கு ரூ.550 கட்டணமாக செலுத்த வேண்டும். ஆக.12-ஆம் தேதிக்குள் விண்ணப்பப் படிவங்களை ஒப்படைக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com