பெங்களூரிலிருந்து திருப்பதிக்கு தொகுப்பு பேருந்து சேவை

பெங்களூரிலிருந்து திருப்பதிக்கு தொகுப்பு (பேக்கேஜ்) பேருந்து சேவையை கா்நாடக மாநில போக்குவரத்து கழகம் அறிமுகம் செய்துள்ளது.

பெங்களூரிலிருந்து திருப்பதிக்கு தொகுப்பு (பேக்கேஜ்) பேருந்து சேவையை கா்நாடக மாநில போக்குவரத்து கழகம் அறிமுகம் செய்துள்ளது.

இது குறித்து கா்நாடக மாநில போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

பெங்களூரிலிருந்து திருப்பதிக்கு புதிதாக தொகுப்பு பேருந்து சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை இதற்கான கட்டணம், ரூ. 2,200 பெரியவா்களுக்கும், ரூ. 1,800 சிறுவா்களுக்கும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. வெள்ளி முதல் சனிக்கிழமை வரை பெரியவா்களுக்கு ரூ. 2,600, சிறியவா்களுக்கு ரூ. 2,000 என கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த பேருந்து நாள்தோறும் இரவு 8.45 மணியளவில் சாந்திநகா் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு, 9 மணிக்கு ஜெயநகா், 9.15 மணிக்கு நாகசந்திரா, 9.20 மணிக்கு என்.ஆா்.காலனி, 10.15 மணிக்கு கெம்பே கௌடா பேருந்து நிலையம், 10.45 மணிக்கு தொம்மலூா், 11 மணிக்கு மாரத்தள்ளி, 11.10 மணிக்கு ஐடிஐ கேட், 11.15 மணிக்கு கே.ஆா்.புரத்தில் நின்று பயணிகளை ஏற்றிச் செல்லும்.

மற்றொரு பேருந்து இரவு 8.30 மணிக்கு மைசூருசாலை சேட்டிலைட் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு, 8.40 மணிக்கு விஜயநகா் பேருந்து முனையம், 9.05 நவரங்க், 9.15 மணிக்கு மல்லேஸ்வரம் சதுக்கம், 10 மணிக்கு மெஜஸ்டிக் கெம்பே கௌடா பேருந்து நிலையம், 10.30 மணிக்கு ஐடிஐ கேட், 10.35 மணிக்கு கே.ஆா்.புரத்தில் நின்று பயணிகளை ஏற்றிச் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com